Subscribe Us

header ads

மு.காவின் மத்திய குழுக் கூட்டத்தில் மாகாண அமைச்சர் நஸீர் உரையாற்றுகையில்,

இந்தப் பாராளுமன்ற கால எல்லைக்குள் அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நிச்சயமாக தருவேன் என்று உறுதியளித்தள்ளது என கிழக்கு மாகாண சுகாதாரசுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கூட்டம் மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்க கலாசார மண்டபத்தில்  இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக தான் பதவியேற்றமை தொடர்பில் நான் உங்களுக்கு விளக்கமளிக்கும் தேவை எனக்குள்ளது. அதற்காகவே நான் இந்த அவசரக்கூட்டத்தை கூட்டச்சொன்னேன். சுகாதார அமைச்சைப் பொறுப்பெடுத்தவுடன் அட்டாளைச்சேனை மு.கா. மத்திய குழு உறுப்பினர்களை அழைத்து அது தொடர்பாக விளக்கி்னார்.

இந்த மாகாண அமைச்சை ஒரு பொருட்டாகவே எமது மக்கள் எடுக்கவில்லை இதைவிட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையே எமது மக்களும் மத்தியகுழுவும் எதிர்பார்த்து தங்களின் ஆதங்கங்களையும், ஆத்திரங்களையும் அன்மைக்காலமாக வெளியிட்டு வருகின்றனர். இருந்தாலும் கட்சித் தலைமை தற்போது எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை முன்னிருத்தியே இந்த அமைச்சுப் பொறுப்பை என்னை ஏற்றுக்கொள்ளச் செய்தது.  

கட்சியையும், கட்சியின் தலைமையையும் காப்பாற்றவேண்டிய தேவை எனக்கும் மக்களாகிய உங்களுக்கும் இருக்கின்றது. கட்சியின் தலைமை வாக்களித்த்துபோல் அட்டாளைச்சேனைக்குரிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கட்டாயம் அட்டாளைச்சேனைக்கு தந்தே தீரும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இருப்பினும்அட்டாளைச்சேனைக்கு மு.கா. தலைமை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு இருக்கவேண்டும். அந்த நம்பிக்கைக்கு கட்சியின் தலைமை ஒருபோதும் மாறுசெய்யாது நிச்சயமாக உறுதியாக இருக்கின்றது. தற்போது கட்சி எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை மக்கள் மத்தியில் விளக்கிச்சொல்ல காலதாமதம் போதாது போனதாலேயே இந்த அமைச்சை மு.காவின் தலைமை என்னை மிக அவசரமாக எடுக்கச்சொன்னது. அதனாலாயே இந்த அமைச்சை நான் எடுத்தேன் என்றார்.

அபு அலா -

Post a Comment

0 Comments