வடபுல மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து துறத்தப்பட்டு அகதிகளாக்கபட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்னமும் அதே அகதிகள் என்ற பட்டத்தை முதுகுகளில் சுமப்பது மட்டுமன்றி தன் அடுத்த சந்ததியினருக்கும் கொடுத்திருப்பது முஸ்லிம் என்ற வகையில் எமக்கும் மனதை உறுத்துவதாகவே உள்ளது.
அன்று 89-90 களில் அவர்கள் துறத்தியடிக்கப்பட்ட போது சொந்த இடங்களை விட்டால் வேறு இடம் தெரியாத அந்த அப்பாவி மக்களுக்கு, அடுத்த வேளை உண்ண உணவின்றி, உடுத்திய உடையுடன், பச்சிளம் குழந்தைகளை எந்தியவாறு வந்தவர்களுக்கு இலங்கையின் பல இடங்களிலும் புகழிடம் கிடைத்தது. அதில் புத்தள பூமி முக்கியமான ஒரு இடத்தை வகிக்கின்றது.
புலிச்சாக்குலம் தொடக்கம் வேப்பங்குளம் வரை அதே போல் கல்பிட்டி வீதி பூராக அகதிகளாக வந்த மக்களுக்கு புகழிடம் வழங்கி தம் சமூகத்தின் ஒரு பகுதியினராக உள்வாங்கி கொண்டது. இருக்க இடத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாது உணவின்றி, உடுத்த உடையின்றி வந்தவர்களுக்கு உணவு, உடை, தங்குவதற்கு வீடுகள், வீட்டளவு காணிகள், பொருளாதார உதவிகள் உட்பட தேவையான அணைத்து விதமான அடிப்படை தேவைகளையும் நிவர்த்தி செய்தனர் புத்தள மக்கள். கால ஓட்டத்தில் அகதிகளாக வந்தவர்கள் நிரந்தர வாசிகளானார்கள். அவர்களின் அகதி வாழ்க்கை முகாம்களிலேயே தொடர்ந்தது. யாருமே அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன் வரவில்லை. போரும் முடிந்தது அதன் பிறகாவது அவர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் மீளகுடியேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் புத்தள மக்கள் அவர்களின் உபசரிப்பில் எந்த குறையும் காட்டவில்லை. இன்று வரை புத்தள மக்கள் வட புல மக்களுடன் அணைத்து விடயங்களிலும் பங்கு போட்டு கொண்டுள்ளனர்.
புத்தளத்தின் பொருளாதாரமாக இருக்கட்டும், பாடசாலை கல்வியாக இருக்கட்டும், பல்கலைகழக நுழைவுகளாக இருக்கட்டும் ஏன் வைத்தியசாலை வசதிகளாக இருக்கட்டும் இவ்வாறு இன்னோரென்ன அரசாங்கத்தால் புத்தள மாவட்டத்தில் பதியப்பட்டுள்ள மக்கள் தொகைக்கு மாத்திரம் ஒதுக்கப்படும் சேவைகள் மற்றும் பண ஒதுக்கீடுகளையே கடந்த 25 வருட காலமாக புத்தள மக்கள் வடபுல மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதே நிதர்சன உண்மை. இந்த விடயம் பற்றிய தெளிவு எம்மில் நிறைய பெருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனாலும் இந்த 25 வருடத்தில் புத்தள மக்கள் இந்த வடபுல மக்களிடம் இருந்து எந்த வித பிரதி உபகாரத்தையும் எதிர்பார்த்ததுமில்லை, இனியும் நாம் எதிர்ப்பார்க்க போவதுமில்லை. மாறாக வந்தோரை இன்னமும் வாழவைத்து கொண்டிருக்கிறது இந்த புத்தள பூமி. புத்தள நகர பாடசாலைகளிலும் சரி, கடைத்தெருக்களிலும் சரி , ஆட்டோ நிறுத்தும் ஸ்தானங்களாக இருக்கட்டும் இவை போன்ற இன்னோரென்ன பல இடங்களில் கனிசமான அளவு வடபுல மக்களை காண முடியுமாக உள்ளது என்றால் அன்று புத்தள முஹைய்யிதீன் ஜும்மா பள்ளியில் நடைப்பெற்ற ஜும்மா உரையில் அகில இலங்கை உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் புத்தள மக்களை மதீன்த்து வாசிகளுக்கு ஒப்பிட்டு காட்டியதற்கு எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இது இவ்வாறு இருக்க நாம் முக்கியமானதொரு விடயம் பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளொம். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று புத்தள மாவட்டத்தில் பதிந்த வதிவிடதாரிகளுக்கு மட்டும் என அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகளில் இன்றுவரை இரு தரப்பும் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இந்த நிலைமை அன்றிலிருந்து இன்றுவரை புத்தளத்தின் பல விடயங்களில், பல கொணங்களில் பாதிப்பு செலுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. புத்தளம் ஆதார வைத்தியாசாலையில் காலாகாலமாக நிலவி வரும் கட்டிட, கட்டில் மற்றும் மருந்து வகைகளின் பற்றாக்குறையாக இருக்கலாம், பாடசாலைகளில் காணப்படும் தளபாட மற்றும் இன்னோரென்ன பற்றாக்குறைகளாக இருக்கலாம் அது மட்டுமல்ல ஏனைய அரச சேவைகளில் ஏற்படும் போதாமையாக இருக்கலாம் இவை எல்லாவற்றிற்கும் இந்த விடயமே காரணம் எனலாம். எனக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால் இத்தனை வருட காலமாக இந்த விடயம் சமூகத்தின் மத்தியில் கொண்டுவரப்படாதது ஏன்...??அல்லது யாரவது இது பற்றி சமூகத்திற்கு தெளிவு படுத்த முயற்சிகளையாவது எடுத்துள்ளனரா...?? அவ்வாறு இது வரை எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கபடாதவிடத்து இனியாவது இந்த விடயம் பற்றிய தெளிவை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் பொருப்பு சமூகத்தின் படித்த வர்கத்தையே சாரும். வெறுமனே வைத்தியசாலை பிரச்சினை, பாடசாலைகளில் ஏற்படும் பற்றாக்குறைகளுக்காக அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதென்பது நியாயமில்லாத ஒன்றாகவே தெரிகிறது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பற்றி ஆராயும் போது மூன்று விடயங்களே என் அறிவுக்கெட்டின. ஆனால் அவற்றின் சாத்தியப்பாடுகள் பற்றி மிக ஆழமாக சிந்திக்கவேண்டி உள்ளது. ஒன்று இன்னும் புத்தள மாவட்டத்தில் குடியிருக்கும் ஆனால் வாக்கு பதிவுகள் புத்தள மாவட்டத்தில் இல்லாத வடபுல மக்களை உடனடியாக புத்தள மாவட்டத்தின் கீழ் பதிய செய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்காலங்களில் எம் மாவட்டத்திற்கான அரசாங்க ஒதுக்கீடுகள் தானாகவே அதிகரிக்கும். இது எந்த அளவுக்கு சத்தியப்படும் என்பது பற்றி சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இரண்டாவது தீர்வுக்கு அதிகமான சாத்தியப்பாடுகள் இருந்தாலும் அரசியல் ரீதியான ஒரு பலம் தேவையாக உள்ளது. அதாவது இன்று புத்தள மாவட்டத்திற்கு அரசால் ஒதுக்கப்படும் பணமும், சேவைகளும் எவ்வாறு பற்றாக்குறையாக உள்ளதோ அதற்கு நிகர்மாறாக, வட மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகள் அளவுக்கு அதிகமாகவே இருக்க வேண்டும். ஆகவே வட மாவட்டங்களில் தம் பதிவுகளை வைத்துக்கொண்டு புத்தள மாவட்டதில் வசிக்கும் க்களின் தொகையை கணக்கிட்டு அந்த சதவீததிற்கு அமைய வட மாவட்டங்களின் ஒதிக்கீடுகளில் ஒரு பகுதியை புத்தள மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். மூன்றாவது தீர்வானது ஒரு தரப்புக்கு சற்று கசப்பானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலையே காணப்படுகிறது. அதுதான் யுத்தம் முடிவுற்று இன்றுடன் 6 1/2 வருடங்கள் பூர்த்தியாகிய நிலையில் வட புல மக்கள் மீண்டும் அவர்களின் இடங்களிற்கு மீள் குடியேற்றப்படுவதாகும். ஆம் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த விடயம் அதிகம் சாத்தியமான விடயமாகலாம். இதற்கான முயற்சிகளை இந்த வடபுல மக்களே எடுக்க வேண்டும். ஏதாவது ஒரு முறையின் மூலம் இந்த விடயம் பற்றி அரசுக்கு விழிப்பூட்ட வேண்டும். இதற்கான அரசியல் ரீதியான முன்னெடுப்புகளை சம்பந்தபட்ட அரசியல் வாதிகள் சற்று வேகத்துடன் முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்து மக்கள் பக்கத்தில் இருந்து வழங்கப்படும் அழுத்தம் மிக முக்கியமானதாக உள்ளது. ஆகவே பிரச்சினையையும் இணம் கண்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மீதமிருப்பது தீர்வகளை நோக்கி பயணிப்பதே.... இறுதியாக இந்த பதிவு முற்றுமுழுதாக சமூக நோக்கில் எழுதப்பட்டதே தவிர எவரது மனதையும் புண் படுத்தும் நோக்கமல்ல.... -ஹனான் அஹ்மட்.

0 Comments