ராஜபக்சர்கள் மோசடிகாரர்கள் இல்லை என நாட்டின் முன் அறிவிப்பதற்கு தான் ஆயத்தமாக இருப்பதாக ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தல் காலப்பகுதியில் அனைத்து அரசியல் மேடைகளிலும் ராஜபக்சர்கள் மோசடிக்காரர்கள் என தான் கருத்து வெளியிட்ட போதிலும் நல்லாட்சி அரசாங்கத்தினால் அதனை இன்னமும் நிரூபித்துகாட்ட முடியாமல் போய்விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் மக்கள் முன் தாங்கள் பொய்காரர்களாகிவிடுவோம் என்பதனால் தான் ராஜபக்சர்கள் மோசடிகாரர்கள் இல்லை என அறிவிப்பதாக பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments