Subscribe Us

header ads

கம்­பளை பெர­ஹெரா, முன்னாள் அமைச்சர் காதர் ஹாஜி­யாரின் ஜனா­ஸாவை கௌர­விக்­கு­மு­க­மாக மாற்று வீதியில் பய­ணித்­தது.

கம்­பளை மன்­னர்கள் காலம் முதல் இடம்­பெற்­று­வரும் வர­லாற்று சிறப்­பு­மிக்க பாரம்­ப­ரிய கம்­பளை பெர­ஹெரா, முன்னாள் அமைச்சர் காதர் ஹாஜி­யாரின் ஜனா­ஸாவை கௌர­விக்­கு­மு­க­மாக மாற்று வீதியில் பய­ணித்­தது.

கம்­பளை அனைத்து விகாரை சங்க சம்­மே­ள­னத்தின் தீர்­மா­னத்­திற்கு அமை­வா­கவே இவ்­வாறு குறித்­த­பெ­ர­ஹெரா மாற்று வீதி­யி­னூ­டாக பய­ணித்­தது.

பொத்­த­ல­பி­டிய விஹா­ரை­யி­லி­ருந்து வல்­ல­ஹ­கொ­டக்கு செல்லும் இந்த பெர­ஹெ­ரா­வா­னது  கம்­ப­ளையை தலை­மை­யாக கொண்டு இந்­நாட்டை ஆண்டு மன்­னர்கள் காலம் முதல் பாரம்­ப­ரி­ய­மாக பெளத்­தர்­க­ளால் மேற்­கொள்­ளப்­படும் வழி­பா­டாகும்.

வழ­மை­யாக குறித்த பெர­ஹெரா பொத்­த­ல­பி­டிய விகா­ரை­யி­லி­ருந்து கண்டி வீதி­யி­னூ­டாக சென்று அம்­ப­க­முவ சந்­தியில் திரும்பி அம்­ப­க­முவ வீதி­யூ­டாக வல்­ல­ஹ­கொட விகா­ரையை சென்­ற­டையும்.

குறித்த அம்­ப­க­முவ வீதியில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதரின் வீடு இருக்­கின்­றது. நேற்­றைய தினம் அவ­ரது ஜனாஸா நிகழ்­வுகள் இங்கு இடம்­பெற்­ற­மை­யினால் கம்­பளை பெர­ஹெ­ராவை மாற்று வீதி­யி­னூ­டாக கொண்டு செல்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதே­வேளை, கடந்த வருடம் இவ்­வீ­தி­யி­னூ­டாக பெர­ஹெரா செல்­லும்­போது பெர­ஹெ­ராவில் கலந்­து­கொண்­டி­ருந்த பெளத்­தர்­க­ளுக்கு காதர் ஹாஜியார் மற்றும் அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் கம்­பளை நகர பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக சிற்­றுண்­டி­களும் குளிர்பானங்களும் வழங்கியிருந்தார்.

1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரமானது இந்த வரலாற்று பாரம்பரிய பெரஹெராவின்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் காதரின் ஜனாஸா நேற்று நல்லடக்கம்; மஹிந்த, டீ.எம்.ஜயரத்ன அஞ்சலி
கண்டி மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான அப்துல் காதரின் ஜனாஸா நேற்று மாலை 5 மணியளவில் கம்­ப­ளையில்  நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

கம்­பளை டவுண் பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நடை­பெற்ற நல்­ல­டக்­கத்தில் அமைச்­சர்கள், ஆளும்­கட்சி மற்றும் எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்து கொண்­டனர்.

நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை கண்­டியில் தனியார் வைத்­தி­ய­சா­லயில் 79 ஆவது வயதில் முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் கால­மானார். இந்­நி­லையில் அவரின் ஜனாஸா கம்­ப­ளையில் அவரின் இல்­லத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. பெருந்­தொ­கை­யான மக்கள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை முதல் இறுதி மரி­யாதை செலுத்­தினர். இதனால் அம்­ப­க­முவ வீதியில் பெருந்­தொ­கை­யான மக்கள் குழு­மி­யி­ருந்­த­மையைக் காண முடிந்­தது. 

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச மற்றும் முன்னாள் பிர­தமர் டீ.எம்.ஜய­ரத்ன ஆகியோர் ஜனா­ஸாவில் கலந்­து­கொண்­டனர். முன்னாள் அமைச்­சரின் மறைவை முன்­னிட்டு கம்­பளை நகரில் வர்த்­தக நிலை­யங்கள் பிற்­பகல் மூடப்­பட்­டி­ருந்­த­மையைக் காண முடிந்­தது.

அத்­துடன் கம்­ப­ளைக்கு வரும் அர­சியல் தலை­வர்­களைக் கருத்தில் கொண்டு பொலிஸார் நகரில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்களையும் மேற்கொண்டிருந்தனர்.




-எம்.எம்.எம்.ரம்ஸீன்

Post a Comment

0 Comments