அன்றொரு நாள் புத்தளத்தில் சமூக நிறுவனம் ஒன்றின் இளைஞர் நிகழ்ச்சியோன்றுக்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் போது ஒரு மூத்த சகோதரர் ஒருவர் அந்த குறிப்பிட்ட சமூக நிறுவனத்திற்கு வந்தார். அவர் எங்களிடம் வந்து தொனு தொனுத்த குரலில்....... “தம்பி என்னட ஊட்டுல குசின இல்ல தம்பி.... குசினி ஒன்னு கட்டி தாங்க தம்பி.... ஏலாதுண்டு சொல்லிறாதிங்க தம்பி.....” (அவரின் கண்கள் கலங்கிய நிலையில் இருந்தது).நான் உடனே நினைத்தேன் இவர் எங்கும் புத்தளத்தின் கோடிப்புறத்தில் இருந்து வந்திருக்கிறார் போலும்... இருந்தாலும் நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று? எனது கேள்விக்கு அவரளித்த பதில் சற்று அதிர்ச்சியாக இருந்தது..... அந்த மனிதர் நான் நினைத்ததை போல் புத்தளத்தின் ஓரப்புரத்திளிருந்து வரவில்லை... எமது நகரமத்தியை அண்மித்த பகுதியான சவீவபுரத்திலிருந்து வந்திருந்தார்.
சவீவ புறத்திலும் இப்படியொரு நிலைமையா?????? என்று என்னுள் ஆதங்கப்பட்டுக்கொண்டு அவரை கைவிட கூடாது என்ற முடிவுடன் அவரின் முழு விபாரங்களை பெற்றுக்கொண்டேன். அவரின் சொந்த ஊர் திருகோணமலை, அவர் புத்தளத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார்கள். (அவரின் மனைவி புத்தளத்தில் ஒரு காலத்தில் எல்லாராலும் அறியப்பட்ட ‘ஐசாமா கண்ணாவின்’ மகள்) இவரிற்கு இருபிள்ளைகள். மகள் ஒருவரை திருமணம் செய்து கொடுத்து விட்டார். அடுத்தது மகன் ஒருவர் இருகிறார் வயது 17 அவரின் கல்வியை இடை நிறுத்தி விட்டு தொழில் ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்.
எம்மிடம் உதவி கேட்டு வந்தவரும் பாலாவியில் கடை ஒன்றில் வேலை செய்கிறார். தனது வீட்டு தேவையை தானே பூர்த்தி செய்துகொள்ள அவரின் வருமானம் போதாது என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிய வந்தது. நாம் உதவி தேடி வந்திருக்கும் அவரை வெறுமையோடு அனுப்ப கூடாது என்பதற்காக அவர் தேடி வந்த அந்த குறிப்பிட்ட சமூக நிறுவனத்தின் செயலாருக்கு கடிதம் ஒன்று போடுங்கள் என்று கூறி விட்டு அவரின் வீட்டை சென்று பார்ப்பதற்கு நேரம் ஒன்று ஒதுக்கி அவரின் வீட்டை சென்று பார்த்தேன்...
முதல் தடவையாக பார்த்த எனக்கே மனம் வெதும்பியது.... புத்தளத்தில் மூளை முடுக்குகளில் மாடமாளிகைகளை கட்டியெழுப்பி அழகு பார்க்கும் தனவந்தர்களின் முகங்கள் மனதுள் வந்து போனது.. மறுபக்கம்.... ‘அல்லாஹ் அல் குர்ஆனில் எம்மை ஒரு உடலை போன்றவர்கள் என்று கூறியிருக்கும் போது.... இங்கே எனது உடம்பின் ஒரு பகுதி நோய்வாய்ப்பட்டுள்ளது காணாமல் இருந்துள்ளேனே!!!!’ என்று வெக்கமாகவும் இருந்தது.
அவரின் வீடு முற்றாக சேதமுற்று இருந்தது... அது மனிதன் வாழ தகுதியற்றதாகவே இருந்தது. ஒரு வராண்டாவும் சமையலறையாக உபயோகிக்கும் ஒரு படுக்கையைறையுமே அந்த வீட்டில் இருந்தது. வீட்டை சுற்றி நீர் வெள்ளம் நிரம்பி இருந்தது.
யாரோ நல்லுள்ளம் படைத்த நலன் விரும்பி இந்த குடும்பத்திற்கு மலசல கூட வசதியை செய்துகொடுத்துள்ளார், அதே போல் இன்னொரு நலன்விரும்பி pipepipe line வசதியை செய்துகொடுத்துள்ளார். அல்லாஹு தஆலா அவ்விருவரின் நல்லமல்களை ஏற்று அவர்களின் ஈருலக வாழ்வையும் சிறப்பாக்கி வைக்க வேண்டும்.
இருந்தாலும் அக்குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூரனமைடையவில்லை அவசரமாக அவருக்கு அத்தேவைகளை பூரணப்படுத்தி கொடுக்க வேண்டி உள்ளது.
அன்பார்ந்த நம்மூர் பெருந்தகைகளே!
தமது ஹலாலான உழைப்பை மேலும் மேலும் தரமுயர்த்த பாடுபடும் அல்லாஹ்வின் செல்வம் எனும் அருளுக்குரியவர்களே!
புத்தளத்தின் மூளை முடுக்குகளிலும் வானத்தை தொடும் மலை முகடுகளை போல மாட மாளிகைகளை உயர்த்திக்கொண்டே செல்லும் பணக்குபேரர்களே!
நான்கு பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளில் அன்றாடம் சேரும் சகதியுடன் உறவாடிக்கொண்டிருக்கும்போது.... அவர்களின் கிணற்றடியை உங்களது ஜன்னல் வழியாக பார்க்கும் வண்ணம் மாளிகையை அமைத்து (அவர்கள் சுதந்திரமாக குளிக்க கூட முடியாமல் அவர்களை திண்டாட வைத்து) அவர்களின் மனம் வெதும்பளுக்கும் அவர்களின் பதுவாக்களுக்கும் ஆளான பண முதலைகளே!
அல்லாஹ் அருளிய செல்வம் எனும் அருளை நீங்கள் மேலும் ஹலாலான வழியில் பெருப்பித்துக்கொள்ள அல்லாஹ் தாரளமாக அனுமதித்து உள்ளான்.....
ஹாலாலான முறையில் செல்வமீட்டுவதும்... ஹாலாலான முறையில் அச்செல்வத்தை அனுபவிப்பதும்... இஸ்லாம் ஹலாலாக்கியுள்ள முக்கியமான விடயம்.
அருள்பாலிக்கப்பட்ட அன்பார்ந்த செல்வந்தர்களே... நீங்கள் ஹாலாலாக உழைத்த, ஹாலாலக அனுபவித்த சொத்து சுகங்களை ஹராமாக்கி விடாதீர்கள்.
உங்களது செல்வத்திலும் மேலே குறிப்பிட்ட சவீவபுற சகோதருக்கான உரிமையை அல்லாஹ் உங்களது செல்வத்தில் வைத்துள்ளான்.... அதை மறைத்துவிடாதீர்கள்...
- ஹாலு நஷ்வா –
• குறிப்பிட்ட சகோதரரின் முகவரி:
Y L Abdurrahman,
No: 84/22,
Sweevapuram,
Puttalam.
Tel: 0325716245
-சமூக நலன் விரும்பி-

0 Comments