Subscribe Us

header ads

நெஞ்சில் பலகைத் துண்டு குத்திய மாணவன் உயிரிழந்தார்

மரத்திலிருந்து விழுந்தபோது நெஞ்சுப் பகுதியில் பலகைத் துண்டு குத்திய நிலையில் அனுமதிக்கப்பட்ட களுத்துறை - புளத்சிங்கள மாணவன் இன்று காலை 10.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

புளத்சிங்கள பேரகஸ்கொடல்ல பகுதியைச் சேர்ந்த  16 வயதான குறித்த மாணவன் தனது சிறிய தந்தையுடன் வயலுக்கு சென்ற வேளை அங்கு மாம்பழம் பறிக்கும் நோக்கில் மரத்தில் ஏறியபோது கீழே விழுந்தார்.

இதன்போது நிலத்தில் நிலைகுத்தாக இருந்த பலகை துண்டு சிறுவனின்  நெஞ்சில் பாய்ந்தது.

பின்னர் 6 மணித்தியால அறுவைச் சிகிச்சை மூலம் மாணவனின் நெஞ்சில் பாய்ந்த பலகைத் துண்டு அகற்றப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments