Subscribe Us

header ads

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தீப்பற்றி எரிந்த விமானம் (காணொளி)

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து 101 பயணிகளுடன் வெனிசுலாவுக்கு புறப்பட்ட விமானமொன்று ஓடுதளத்தில் வைத்து திடீரென தீப்பிடித்து எரிந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,


இந்த விமானம், ஓடு பாதையில் சுற்றி பறக்க தயாராக இருந்தவேளையில், விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியான திடீர் தீ, மள மளவென விமானத்தின் மையப்பகுதிக்கு பரவியது. தீ கொளுந்து விட்டு எரிய, புகை மண்டலத்துடன் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தைக் கண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

அதே நேரம், விமானத்தில் தீ பற்றியதை அறிந்துகொண்ட விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துக் கொண்டே விமானத்தின் வேகத்தைக் குறைந்தபடி சில நொடிகளுக்குள் விமானத்தை நிறுத்தினார். உடனே அந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களும், நோயாளார் காவி வாகனங்களும் விரைந்து வந்துள்ளன. விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டு அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர்.

மேலும், விமானத்தின் அவசரக் கதவுகள் திறக்கப்பட்டதும், புகை உள்ளே புகுந்ததால் சில பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டனர். வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலம் விமான நிலைய கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே தங்க வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் காணொளியும் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments