Subscribe Us

header ads

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் உலகிற்கு பொய்யுரைத்து வந்தது – சஜித் பிரேமதாச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் முழு உலகிற்கும் பொய்யுரைத்து வந்ததாக வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது சர்வதேச சமூகத்திற்கு பொய்யுரைப்பதாகவே அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்திற்கு திடமான ஓர் வெளியுறவுக்கொள்கை இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் வெளிவிவகார அமைச்சர் ஒன்றைக் கூறும் போது அவரது கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாடுகளில் வேறு ஒன்றை குறிப்பிட்டு வந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரும் போது ஒன்றைக் கூறும் அரசாங்கம், புதுடெல்லி விஜயம் செய்யும் போது வேறும் ஒன்றைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளினால், ராஜதந்திர ரீதியில் இலங்கை பாரியளவு பின்னடைவினை எதிர்நோக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் மக்களை பிழையாக வழிநடத்த எமது எதிரிகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பினை மலினப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுளளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் மூலம் கடந்த ஆட்சியாளர்களே நாட்டை காட்டிக் கொடுத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments