சில பெற்றோர்கள் வேலையிலேயே பிஸியாக இருப்பார்கள் தங்கள் பிள்ளைகளை கண்டு கொள்வதே இல்லை. அபூர்வமாக நேரம் கிடைத்தால்கூட அப்போதும் பிள்ளைகளிடம் பரீட்சை அட்வைஸ் தான். இதனால் வெறுத்துப் போய் மாணவ பிள்ளைகள் பெற்றோரிடமிருந்தும் படிப்பிலிருந்தும் விலகிப் போய்விடுகின்றன. இதனால் இன்னும் சில மாணவ, மாணவிகள் வீட்டை விட்டுகூட செல்கின்றார்கள். சில மாணவர்கள் நல்ல ரேங்க்கில் இருந்தாலும் பெற்றோரின் டார்ச்சர் தாங்கமுடியாமல் படிப்பில் தலைகீழ் மாற்றத்துக்கு ஆளாவார்கள்.
மன அழுத்தம் ஏற்படும் விதம் இதுதான். ஓய்வே இல்லாமல் ஒரே வேலையைச் செய்து கொண்டிருப்பதும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாவதும் நமக்கு ஏற்படுத்துகிற மனஉளைச்சல்தான் மன அழுத்தம். பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை யாருக்கும் இது ஏற்படலாம். மன அழுத்தம் தீவிரமாகித் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளும் குழந்தைகள் வெளிநாட்டில் அதிகம்.
அடிக்கடி பெருகும் வியர்வை, படபடப்பு, மறதி, பாடத்தின் மீது வெறுப்பு, வீட்டினருடன் தேவையற்ற கோபம், நண்பர்களைத் தவிர்ப்பது போன்ற அறிகுறிகள் பிள்ளைகளிடம் தெரிந்தால் போதும். அவர்கள் மன அழுத்தம் அதிகமாகி, கஷ்டப்படுகிறார்கள் என பெற்றோர்கள் உஷார் ஆகிவிடலாம்.
இன்றைய மாணவர்கள் மிக எளிதாக மன அழுத்தத்தில் வீழ்வதற்கு முதல் காரணம், போட்டியை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறைதான். நம் பெற்றோர்களிடம் "ஐந்தாண்டுத் திட்டம்" ரேஞ்சுக்கு ப்ளான் இருக்கிறது. இந்தக் கனவு பிள்ளைகளின் மனதில் வலுவாக ஏற்றப்படுகிறது. ஆர்வமும் படிக்கும் திறனும் கொண்ட மாணவர்கள் இந்த நெருக்கடியை ஓரளவு சமாளித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் இந்த எதிர்பார்ப்புகளை நெருக்கடிகளாகத்தான் பார்க்கிறார்கள். ஆசிரியர்களின் பங்கும் இதில் அதிகம். மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சிக்கு வந்த முதல் நாள் வகுப்பிலேயே "இந்த முறை நீங்க அரசுத் தேர்வு எழுதப் போறீங்க. இனி உங்களுக்கு டி.வி., சினிமா, விளையாட்டு, அரட்டை எதுவும் கிடையாது. சாப்பாடு, உறக்கம் எல்லாமே படிப்புக்குப் பிறகுதான்!" என கார்கில் போர்முனையில் நிற்பது போல பயமுறுத்தும் ஆசிரியர்கள்கூட இருக்கிறார்கள். இது நூறு சதவீதம் தவறான அணுகுமுறை. அதிக மதிப்பெண்களை எடுக்க வைப்பதற்குப் பயமுறுத்தல்கள் உதவாது. வகுப்பறை, ஆசிரியர், தேர்வு உட்பட அனைத்தின் மீதும் மாணவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதில்தான் இவை முடியும்.
வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையான பேச்சும், அதையும் மீறி தோல்வி அடையும்போது ஆறுதலான அறிவுரையும்தான் சரியான வழிமுறை. சிரிப்பு மன அழுத்தத்திற்குக் கண்கண்ட மருந்து. டெல்லியிலுள்ள சில ஸ்கூல்களில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு, தினமும் சில நிமிஷங்கள் வாய்விட்டுச் சிரித்த பிறகு தான் வகுப்பை ஆரம்பிக்கிறார்கள். இந்தளவுக்குப் போகாவிட்டாலும், நம் பள்ளிகளில் ஒரு மனநல ஆலோசகரை நியமிப்பது அவசியம்.
"டேய், அந்தப் பையனும் உன்னை மாதிரிதானே. அவன் கணக்குல "சென்டம்" வாங்கும் போது, நீ மட்டும் எண்பதுக்கு மேலே தாண்ட மாட்டேங்கிறியே?" என்பது போன்ற ஒப்பீடுகளை வீடுகளில் அடிக்கடி கேட்கலாம். இந்த எதிர்மறையான ஒப்பீடுகள் மாணவர்களை மனஅழுத்தத்தில் சிக்க வைப்பதற்கு ஷார்ட் ரூட்! ஒவ்வொரு மாணவனும் தனித்தன்மை வாய்ந்தவன். பேச்சு, திறமை, கையெழுத்து என ஒவ்வொன்றும் மாறுபடுவதைப் போல, அவர்கள் படிக்கும் திறனும் கண்டிப்பாக மாறுபடும். கூடவே, மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் விதமும். "எங்க ஆபீஸ் கிளார்க் பொண்ணு காலையில் நாலு மணிக்கே எந்திரிச்சு படிப்பாளாம்! நம்ம பையன் அப்போ குறட்டை விட்டுகிட்டு தூங்குறான்" என அலுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் பையன்க்கு இரவில் படிக்கும் பழக்கம் இருக்கும்.
பிள்ளைகளின் வசதிக்காகத் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளும் பெற்றோர்கள் மிகவும் குறைவு. தேர்வு சமயங்களில் ஒருநாள் விடுமுறை போட்டுவிட்டு, உங்கள் பிள்ளைகளுடன் இருந்து பாருங்கள். நீங்கள் உடன் இருக்கும் தைரியம் அவர்களின் கண்களில் தெரியும். வீட்டின் கலகலப்பான சூழல் பிள்ளைகளுக்கு சந்தோஷத்தைத் தரும்தான். ஆனால் அதற்காக அடிக்கடி ஆரவாரமான பார்ட்டி நடப்பதும் விருந்தினர்கள் வந்து போவதும் குழந்தைகளின் மன அமைதியைக் குலைக்கும். வீட்டையே அதிர வைக்கும் ஹோம் தியேட்டர், நான் ஸ்டாப் ஆக ஒலிக்கும் ரேடியோ, அடிக்கடி சிணுங்கிக் கொண்டேயிருக்கும் போன் சகிதம் வீட்டில் சத்தமான சூழ்நிலை இருந்தால் அதையும் மாற்றுங்கள். அதிக சத்தம் கேட்டு வளரும் குழந்தைகள் எழுதப் படிக்க மெதுவாகவே கற்றுக் கொள்கிறார்கள் என சமீபத்தில் விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன் அருகே வசிக்கும் குழந்தைகளிடம் செய்த ஒரு வெளிநாட்டு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 15 வருடங்களில் மன அழுத்தம் (stress) காரணமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
இவற்றோடு, பெற்றோர் மறக்கக்கூடாத இன்னொரு விஷயம், மன அழுத்தமே இல்லாமலும் மாணவர்கள் இருக்கக் கூடாது. தேர்வில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அளவோடு இயல்பாக இருக்கட்டும். வரம்புகளின்றி உங்கள் பிள்ளைகள் ஜெயிப்பதைப் பார்ப்பீர்கள்.

0 Comments