இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. குற்றம் செய்தவர்களே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாஸ ஐ.நா உள்ளக விசாரணை தொடர்பான பொறிமுறை இன்னும் தயாரிக்கப்படவில்லை அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதுடன் சிறையிலுள்ள தமிழ் கைதிகள் உண்ணா விரதத்தை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பாக நீதியமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்க்கப்பட்ட போதே அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,
சிறையிலுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நீதியமைச்சிக்கு தற்போது எந்த வகிபாகமும் கிடையாது. இந்த பொறுப்பு தற்போது சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு சட்டம் ஓழுங்கு தொடர்பான அமைச்சிடமே உள்ளது.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அரசாங்க மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரச மட்டத்திலேயே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
நீதிமன்றம் இவ்விடயத்தில் தலையிட முடியாது.
நீதிமன்றம் இவ்விடயத்தில் தலையிட முடியாது.
அதேவேளை தடுப்புக் காவலிலும், சிறைச்சாலைகளிலும் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது. இதற்கு தமிழ் கைதிகளும் விதிவிலக்கல்ல. எனவே தமிழ் அரசியல் கைதிகள் இங்கு இல்லை.
கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோரே சிறையில் கைதிகளாக உள்ளனர். எனவே இவ் விடயம் சட்ட ரீதியாகவே அணுகப்பட வேண்டும்.
வாசுதேவ நாணயக்கார எம்.பி. தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஊடகங்களுக்கு கூறுகின்றார். ஆனால் இதே வாசு, விமல் வீரவங்ச, உதய கம்பன்பில ஆகியோர் புலிகளுக்கு அரசாங்கம் உதவுவதாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இன வாதத்தையே பரப்புகின்றனர்.
வாசுதேவ நாணயக்கார எம்.பி. தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஊடகங்களுக்கு கூறுகின்றார். ஆனால் இதே வாசு, விமல் வீரவங்ச, உதய கம்பன்பில ஆகியோர் புலிகளுக்கு அரசாங்கம் உதவுவதாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இன வாதத்தையே பரப்புகின்றனர்.
ஐ.நா. அறிக்கையிலும் இவ்விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே அரச மட்டத்தில் இது ஆராயப்படும்.
ஐ.நா. அறிக்கை, ஜெனிவா பிரேரணை, உள்ளக விசாரணை தொடர்பாக அரசாங்க உயர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இது வரையில் உள்ளக பொறிமுறை தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றார்.


0 Comments