Subscribe Us

பாகிஸ்தானில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை உயிருடன் எரித்த காதலன் கைது...

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சோனியாபீபி (20). இவரை அதே பகுதியை சேர்ந்த லத்தீப் அகமது (24) என்ற வாலிபர் காதலித்தார்.

ஒரு கால கட்டத்தில் இவர்களது காதல் முறிந்து விட்டது. இந்த நிலையில் லத்தீப் அகமது சோனியா பீபியை சந்தித்து தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். அதற்கு சோனியா மறுத்து விட்டார்.

இதனால் லத்தீப் அகமது ஆத்திரம் அடைந்தார். அதைத் தொடர்ந்து சோனியா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். இதனால் உடல் முழுவதும் கருகிய சோனியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து முல்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து லத்தீப் அகமதுவை கைது செய்தனர்.

Post a Comment

0 Comments