பெண் பிள்ளைகளை கரைசேர்க்க வேண்டுமே என்ற ஏக்கமும் கவலையும் தற்போது பெற்றோரைப் பாடாய்ப்படுத்துகின்றது.
முன்னோர்கள் காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்த வீட்டில் இருந்ததைப் போலவே புகுந்த வீட்டில் சந்தோசமாக வாழவேண்டும் என்று
பாத்திரம், பண்டம், நிலம்(மஞ்சட்காணி) போன்ற சீர்களை தானமாக பெற்றோர்கள் விரும்பி கொடுத்து அனுப்புவார்கள்.
ஆனால் தற்போதைய சூழல் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் சீரை தானமாகக் கொடுத்தால்தான் திருமணம்.
அரசாங்க வேலை பார்க்கும் மாப்பிள்ளை என்றால் அவருக்கு ஒரு தொகை, வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் அவருக்கு ஒரு சீதனம், கூலி வேலை செய்பவர் என்றால் அவருக்கு ஒரு சீதனம்; என தரகர் கையில் ஒரு பெரிய பட்டியலே இருக்கும்.
பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே என்பதைச் சிந்திக்காமல் சீதனம் வாங்குவதும் கொடுப்பதும் கலாசாரம் என நமது சமூகம் தவறான எண்ணத்தை வளர்த்துள்ளது.
மாப்பிள்ளை பெயரை சொல்லி அவரின் தாய்தான் தான் சீதன் கேட்பதாக பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இத்தனை வருடம் தன்னை வளர்த்து படிக்கவைச்ச பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளின் வாழ்க்கைக்காக சீதனம் வாங்குவதாக சில ஆண்கள் கூறுகின்றனர்.
அப்படியாயின் பெண்களுக்கு அப்படியான பொறுப்புக்கள் இல்லையா?
மகனுக்கு அதிகமா சீதனம் வாங்கினால்தான் மதிப்பு என்று பலரும், பெண்ணுக்கு நிறைய சீதனம் கொடுத்தால்தான் மாப்பிள்ளை வீட்டில் கௌரவம் என்று சில பெற்றோரும் நினைக்கின்றனர். அதனால் வீடு, நிலம், கார், இலட்சக்கணக்கில் பணம் என மாப்பிள்ளை வீட்டார் வாயில் வந்தவற்றை கேட்கின்றனர்.
இருப்பவர்கள் கொடுக்கின்றனர். இல்லாதவர்கள் என்ன செய்வது?
மனைவி கொண்டுவரும் சொத்துக்களை எதிர்பார்த்து வாழ்பவர்கள் என்று ஒட்டுமொத்த ஆண்களையும் சொல்லிவிட முடியாது. தனது மனைவியையே பெரிய சொத்தாக நினைக்கும் ஆண்களும் உண்டு. வாழ்க்கையில் எங்களால் உழைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்பிள்ளைகள் பிறப்பதையே சாபமாக கருதுகின்றனர். இதனால் தான் இன்றும் அங்கு கிராமப்புறங்களில் பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்து கொலைசெய்கின்ற நிலை காணப்படுகின்றது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறுவது போல சீதனத்தின் தொகையும் கூடிக்கொண்டே செல்வதால் இனி கள்ளிபால் கொடுக்கும் நிலை உருவாகாலம்.
இப்போதே சமூகம் விழிப்படைந்துகொண்டால்தான் இந்த இழிநிலையிலிருந்து தப்பிக்கலாம்

0 Comments