Subscribe Us

விமானப் பயணங்களில் திரைப்படங்களுக்கு மூடுவிழா - ஐபேட்களுக்கு இனி திறப்புவிழா

விமானத்தில் பயணிக்கும்போது, முன்இருக்கையின் பின்புறத்தில் வைக்கப்படும் திரைப்படங்களைப் பார்க்கும் ஸ்கிரீன்கள் மட்டும் சுமார் அறுநூற்று எண்பது கிலோ எடையுடன் உள்ளது. இவற்றை நீக்கிவிட்டால், விமானத்துக்காகப் பயன்படுத்தும் எரிபொருளின் அளவைக் குறைத்து செலவீனங்களைக் குறைக்க முடியும் என சர்வதேச விமான நிறுவனங்கள் நீண்டகாலமாகவே கருதிவந்தன.

முதன்முறையாக, இந்த புதிய திட்டத்தை, மற்ற விமான நிறுவனங்களைக் காட்டிலும் குறைவான தொகையையே வசூலித்துவரும் கனடா நாட்டின் பிரபல விமான நிறுவனமான ‘வெஸ்ட்ஜெட்’ அறிமுகப்படுத்தவுள்ளது. பழையமுறைக்கு பதிலாக பயணிகள் தங்களது ஐபேட்களில் தங்களுக்கு தேவையான திரைப்படங்களை கண்டுகளிக்கும் புதுவித வசதியை இந்நிறுவனம் அளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக, சாட்டிலைட்டின் உதவியுடன், அதிவேக வை-பை விமானத்தில் கிடைக்கப்பெறும் எனவும் இந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த இன்டர்நெட் சேவைக்கு குறைந்தபட்சம் பத்து கனடா டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஐந்நூறு ரூபாய்) வரை கட்டணமாக வசூலிக்கப்படுமாம்.

பயணிகள் தம்முடன் கொண்டுவரும், லேப்டாப், ஐபேட் அல்லது மொபைல்களில் உள்ள படங்களையும் பயணத்தின்போது பார்த்து ரசிக்கலாம். அதேபோல, ஐபேட் போன்ற சாதனங்கள் இல்லாமல் பயணிக்கும் இருபது சதவிகிதத்தினருக்கும் இந்த நீண்ட பயணத்தில் படங்களைப் பார்க்க வசதியாக தாமே ஐபேடுகளைத் வழங்க இருப்பதாகவும் வெஸ்ட்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெஸ்ட்ஜெட் நிறுவனத்தின் இந்த முடிவு உலகளவில், அத்தனை விமான சேவை நிறுவனங்களின் முடிவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments