நமது மாவட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை கருத்தில் கொண்டு , நமது தொகுதியில் ஒரு சமுத்திரவியல் பல்கலைகழக பிரிவை ஆரம்பிக்கும் முயற்சியை இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார அவர்களோடு இணைந்து ஆரம்பம் செய்யும் முயற்சியில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஈடுப்பட்டுள்ளார் ..
இதன் ஒரு கட்டமாக இந்த கல்வி நிலையத்தின் அமைவிடத்தை அவதானிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது..
கொழும்பு வீதியில் அமைந்துள்ள காச நோய் வைத்தியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள கடலோடு சார்ந்த அரச காணியில் இந்த சமுத்திரவியல் கல்வியகம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது ...
இதனை ஆரம்பம் செய்வதன் மூலம் சாதாரண தரம் , உயர் தரம் போன்றவற்றோடு கல்வியை நிறுத்தியோரும் , இந்த துறையில் நாட்டமுடையோறும் கல்வியை கற்று உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் உயர் தொழில்வாய்ப்புகளை பெறமுடியும் .
அது மாத்திரமன்றி இந்த துறையில் கற்போருக்கு விஷேடமாக அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளில் புலமை பரிசில்களும் வழங்கப்படுகிறது ...
இதே நேரம் புத்தளம் செயலகத்தில் சிறிய அளவில் இயங்கிய தொழில்நுட்ப பிரிவை (NAITA) விரிவுபடுத்தும் வேலை திட்டம் ஒன்றுக்கான திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டது - இதற்கு திறந்த பல்கலை கழகத்தின் அருகில் உள்ள காணி தெரிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த இரண்டு கல்வி திட்டங்களிலும் அமைச்சர் ரங்க பண்டார , மாகாண சபை உறுப்பினர் எஸ்,எச்.நியாஸ் ஆகியோரோடு சமுத்திரவியல் பல்கலைகழக பிரதி பீடாதிபதி திலக் தர்மரத்ன & பீ.யூ .பெரேரா , இளைஞர் விவகார & திறன் அபிவிருத்தி அமைச்சின் பிரதிநிதிகளும், புத்தளம் பிரதேச செயலாளர் , புத்தளம் மாவட்ட செயலாளர் போன்றோரும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர் .
அதன் ஒரு பகுதி புகைப்படமே இங்கு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது,
எந்தவித ஆரவாரமும் இன்றி ,அடக்கமாக ராஜங்க அமைச்சர் ரங்க பண்டார அவர்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்கள் பெருமிதம் கொள்கிறார் ...
இந்த திட்டம் வெற்றிபெற நாமும் பிராத்திப்போம் , வாழ்த்துவோம்
-ஊடக பிரிவு -
எஸ்.எச்,எம்.நியாஸ்
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்
எஸ்.எச்,எம்.நியாஸ்
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்


0 Comments