Subscribe Us

தற்கொலை எண்ணத்தை போக்கிய ஸ்டாண்ட்-அப் கொமெடியன்: பெரிதும் பாராட்டிய மக்கள்

அமெரிக்க ஸ்டாண்ட்-அப் கொமெடியன் ஒருவர் தற்கொலைக்கு முயன்றவரின் எண்ணத்தை மாற்றியது அப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல ஸ்டாண்ட்-அப் கொமெடியனான Doug Stanhope தமது உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக Edinburgh பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Edinburgh பகுதியில் உள்ள பிரபல உணவு விடுதியில் கொமெடி நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை கவனிக்கும் பொருட்டு கொமெடியன் Stanhope தெருவீதிக்கு வந்துள்ளார்.

அப்போது ஒரு பெண்மணி ஒரு மனிதரை துரத்திக்கொண்டு வீதி வழியாக ஓடுவதை கண்டுள்ளார்.

திடீரென அந்த மனிதர் பக்கத்தில் இருந்த பாலத்தின் மீது ஏறி நின்று தற்கொலைக்கு முயன்றது அந்த பகுதியில் இருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனையடுத்து அந்த மனிதர் அருகே சென்ற Stanhope சில கொமெடியான சம்பவங்களால் தற்கொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Stanhope பேசிய கொமெடியான சம்பவங்களில் புதைந்திருந்த பொருளை உணர்ந்த அந்த மனிதர் தனது தற்கொலை எண்ணத்தை கைவிட்டு தமது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இச்சம்பவம் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது மட்டுமல்ல ஒரு மனிதரின் தற்கொலை எண்ணத்தையே கொமெடி போக்கியது குறித்து பெரிதும் பாராட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments