இலங்கையில் உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் வகையிலான உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாக அங்கொட தேசிய மனநல மருத்துவமனையின் பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் குடும்ப பிணக்குகள் காரணமாக உளவியல் நோய்களினால் பாதிக்கப்படும் நாட்டு மக்களின் எண்ணிக்கை மொத்த சனத் தொகையில் 20 முதல் 25 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் சிறியளவிலான உளவியல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான உளவியல் பாதிப்பு அல்லது மனநோயினால் நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒரு வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிடத்தக்களவானவர்கள் அழுத்தம் காரணமாக உளவியல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன நோய்களினால் பாதிக்கப்பட்ட 8000 பேர் வரையில் அங்கொட மனநல மருத்துவ மனையில் வருடாந்தம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில் ஆயிரம் பேர் தங்கியிருக்கு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வருகின்றனர் என செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற டொக்டர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.


0 Comments