அமெரிக்காவில் நடக்கவுள்ள கண்காட்சி டி20 கிரிக்கெட் போட்டியில் சச்சின், வார்னே, சங்கக்காரா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விளையாட உள்ளனர்.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய ஜாம்பவான் சச்சின், அவுஸ்திரேலிய முன்னாள் சுழல் ஜாம்பவான் வார்னே உள்ளிட்டோர் பங்கேற்கும் போட்டிகள் நடக்கிறது.
இந்தப் போட்டியில் கங்குலி, லட்சுமண், வாசிம் அக்ரம், பிரையன் லாரா, காலிஸ், சங்கக்காரா உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்தப் போட்டிகள் வரும் நவம்பர் 7 (நியூயார்க்), 11 (ஹவுஸ்டான்), 14ம் (லாஸ் ஏஞ்சல்ஸ்) திகதிகள் முறையே 3 கண்காட்சி டி20 போட்டிகள் அரங்கேறுகின்றன.
இந்தப் போட்டிகள் உலக அளவில் கிரிக்கெட்டை கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்று சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


0 Comments