Subscribe Us

header ads

கிழக்கு மாகாண சபை அமர்வு செய்தி

அபு அலா -

கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு நேற்று திங்கட்கிழமை காலை ( 20 ) 9.30 மணியளவில் சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் ஆரம்பமானது.

இந்த சபை அமர்வின்போது எதிர்தரப்பு பக்கம் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் டீ.டீ.மெத்தானந்த சில்வா மற்றும் பி.எல்.அருன் ஸ்ரீசேன ஆகியோர் ஆளும்தரப்பு பக்கம் மாறினர்.

இன்றைய சபையின் முதலாவது நிகழ்வாக விசாரணையின்றி சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு இது தொடர்பான விவாதமும் இடம்பெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments