Subscribe Us

header ads

புழுதிவயல், விருதோடை, கடையாமோட்டை, கனமூலை, கொத்தாந்தீவு என்பவற்றுக்கு தனிதனி உறுப்பினர்கள் வேண்டும்.!

புழுதிவயல், விருதோடை, கடையாமோட்டை, கனமூலை, கொத்தாந்தீவு என்பவற்றுக்கு தனிதனி உறுப்பினர்கள் வேண்டும்.!  அமைச்சர்களிடம் வேண்டுகோள்.!! 

கற்பிட்டி பிரதேச சபையின் கீழ் வரும் புழுதிவயல் (2164 வாக்குகள்), விருதோடை (2224 வாக்குகள்), கடையாமோட்டை , நல்லாந்தளுவ (2440 வாக்குகள்), கனமூலை( 2683 வாக்குகள்), சமீரகம,பெருக்குவட்டான், கொத்தாந்தீவு (3192 வாக்குகள்) ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் பலத்த கோரிக்கைய கருத்தில் எடுத்து புதிய தேர்தல் முறையின் கீழ் தலா ஒவ்வொரு உறுப்பினர்  தெரிவாவதை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்கும் படி புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரிஷாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது.

இப்பிரதேச மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாஷைகள், அபிவிருத்தி உட்பட சகல துறைகளிலும் நீண்ட காலமாக எதிர் நோக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்பவற்றுக்கு குரல் கொடுப்பதற்கும், அவற்றைத் தீர்த்து வைப்பதில் முனைப்புக் காட்டுவதற்கும் மக்கள் பிரதிநிதிகள் தேவைப்படுவதை இப்பிரதேச மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்து வருகின்றனர். இக்கிராமங்கள் தனித்துவம் வாய்ந்த பகுதிகளாகும். தமது தேவைகளை, குறைகளை முறையிட வேறு பிரதேசத்தை நம்பி தொடர்ந்தும் செயற்படுவதில் கசப்பான அனுபவனங்களின் அடிப்படையில் மிகவும் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். 

எனவே இக்கிராமங்களின் சனத்தொகை மற்றும் 2000 இற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கருத்திக் கொண்டு சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளையும், உணர்வுகளையும் புரிந்த தாங்கள் அனைவரும் இது விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்தி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின் போது இக்கிராமங்களுக்கு தொகுதிவாரி முறையின் கீழ் உறுப்பினர்கள் தெரிவாவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி தயவாய் வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments