Subscribe Us

header ads

மாணவர்கள் 39 பேரும் இன்று நீதிமன்றில்

அனைத்து உயர் தேசிய கணக்காளர் பாடநெறிக்கான மாணவர் ஒன்றியம் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 39 மாணவர்களும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த -ப்படவுள்ளனர். காவல்துறையினர் இதனை தெரிவித்தனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக, இவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது காவற்துறை கண்ணீர் புகை பிரயோகம், தண்ணீர் மற்றும் தடியடி தாக்குதல்களை நடத்தியது. இதன்போது பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களின் 12 பேர் தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், 5 காவல்துறையினரும் சிகிச்சை பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 32 மாணவர்களும்,  5 மாணவிகளும் 2 பிக்கு மாணவர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments