நாட்டில் தற்போது கேட்கவும் பார்க்கவும், வாசிக்க கிடைப்பதை பார்க்கும் போது அதனை பற்றி கதைக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக அஸ்கிரிய மாநாயக்கர் கலகம அத்ததஸ்சி தேரர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள ரஜமஹா விகாரையின் நடு விகாரை நேற்று ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குடிமக்களை குணப்படுத்த பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும். பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பணம் உள்ளவர்களுக்கும் கிராமங்களில் உள்ள வறிவர்களும் வித்தியாசங்கள் உள்ளன.
அத்துடன் நாட்டின் சிங்களவர்களுக்கு என்ன நடந்தது என்பதை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் மாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments