கடந்த மூன்று மாதங்களாக வெற்றிடமாக காணப்படும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்றின் பெனான்டோவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இந்த உத்தரவை ஆளுனருக்கு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சராகவிருந்த எம்.எஸ் உதுமாலெப்பை சுகாதார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இது உண்மையாக இருந்தால் இந்த விடயம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸுக்குக் கிடைத்த ஆறுதல் பரிசு என்பதனை விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்ட பாரிய படுதோல்வி என்றே என்னால் கூற முடியும்.
மைத்திரி –ரணில் அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சித்தியின் பிள்ளை என்று நான் அடிக்கடி கூறுவதற்கு உதுமாலெவ்வையின் இந்த நியமனமும் ஓர் அத்தாட்சியாக அமைய முடியாதா என்ன?
அதேவேளை, அதாவுல்லாஹ் அமைச்சராகவிருந்த போது தனது பிரதேசத்துக்கேனும் அளப்பரிய சேவைகளைச் செய்தது போன்று உதுமாலெவ்வையும் தனக்கு கிடைக்கக் கூடிய இந்தப் பதவி மூலம் சேவையாற்றுவார் என்பதிலும் ஐயமில்லை.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

0 Comments