
இம்மலசல கூடங்கள் கையளிக்கும் நிகழ்வில் அல் மீஸான் அமைப்பின் செயலாளர் ஏ.எல். முர்ஸித், உப தலைவர் ஏ.எல்.ஏ. வஹாப், பொருளாளர் ஏ.பி.எம். உவைஸ், உறுப்பினர்களான ஏ.எல்.எம். உவைஸ், என்.எம். பரீட், ஏ.எம். வாஜித், ஏ.எல். ஹம்ஸா ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தில் பாலமுனைப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 4 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு இம்மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டதுடன் சின்னப்பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியில் 2 மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஓவ்வொன்றும் சுமார் 60 ஆயிரம் ரூபா செலவில் அல் மீஸான் அமைப்பினரது நேரடிக் கண்காணிப்பின் கீழ் இவை நிர்மாணிக்கப்ட்டன.
இதனைத் தொடர்ந்து அல் மீஸான் அமைப்பினால் இரண்டாம் கட்டமாக இன்னும்பல வறிய குடம்பங்களை உள்ளடக்கிய பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நஅல் மீஸான் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ரி.எம். ஹ_தைப் தெரிவித்தார்.
அல் மீஸான் அமைப்பினால் பல சமூக நலப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் வறிய குடும்பங்களின் முன்னேற்த்திற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பி. முஹாஜிரீன்
0 Comments