Subscribe Us

header ads

இந்தியாவில் இரண்டு தலித் குழந்தைகளை உயிரோடு தீயிலிட்டு எரித்து படுகொலை : உயர் சாதியினரின் வெறிச்செயல்..!

பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து ஒடுக்கப்பட்ட சமூகமான தலித் சமூக மக்கள் உயர் சாதியினரால் தொடர் தாக்குதலும் அராஜகங்களும் எல்லைமீறி நடைபெற்று வருகிறது.

பாஜக ஆட்சி என்பதால் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன் உயர்சாதியினரான ராஜபுத்திரரகளுக்கும், தலித் சகோதரர்களுக்கும் மோதல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக தலித் சமூகத்தை சேர்ந்த ஜிதேந்தர் ராஜ புத்திரர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் கொண்ட ராஜ புத்திரர்கள் தங்களுடைய நேசத்திற்கு உரிய ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுவதால் ஜிதேந்தரரின் இரண்டு குழந்தைகளையும் தீ வைத்து எரித்து கொன்று விட்டனர்.

இதனால் 2 வயது குழந்தையான வைபவ்வும், 10 மாதக் கைக்குழந்தையான திவ்யாவும் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெற்றோர்கள் நிலைகுலைந்துள்ளனர்.

ஹரியானாவில் தலித் சமூகத்தினருடன் இணைந்து இஸ்லாமிய சமூக மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஹரியானாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தலித் குடும்பம் ஒன்றை நிர்
வணப்படுத்தி சம்பவம் நடந்து. அண்மை காலமாகவே இந்தியாவில் சிறுபான்மை
மக்களுக்கு எதிர நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து வருகிறது.


-Doha Update-

Post a Comment

0 Comments