சிறுமி சேயாவை கொலை செய்ததாக தான் வாக்குமூலம் வழங்கவில்லை எனவும் காவற்துறையினரின் தாக்குதலை தாங்கி கொள்ள முடியாத நிலையில், அவர்கள் வழங்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டதாகவும் கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் உர பையை தலையில் போட்டு தன்னை ஜீப் வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றதாகவும் தாக்கியதாகவும் சுவரில் தலைப்பட்டதால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கொண்டயா என்று தன்னை எவரும் அழைப்பதில்லை எனவும் துனேஷ் அல்லது பொடி என்றே நண்பர்கள் தன்னை அழைத்து வந்ததாகவும் ஊடகங்களே தன்னை கொண்டயா என்று தனக்கு பெயரை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி உந்துல் பிரேமரத்ன, துனேஷூக்கு எதிராக தாக்குதல் நடத்தியமை, கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பாக மாத்திரமே அத்தனக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தாக கூறியுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் குறித்தோ வேறு சம்பவங்கள் தொடர்பிலோ வழக்கோ அல்லது பிடிவிராந்துகளோ அவருக்கு எதிராக இல்ரைல எனவும் உந்துல் பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments