Subscribe Us

header ads

குவைத்தில் தாக்குதலுக்கு உள்ளான பெண் நாடு திரும்பினார்

குவைத் நாட்டில் முகவர் நிலையம் ஒன்றில் பெண்கள் உட்பட சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

குவைத்தில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் தலையீட்டை அடுத்தே இந்த பெண் நாடு திரும்ப சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுழுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள குறித்த பெண் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் தலைவர் உபுல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments