இலங்கையின் டெலிகொம் நிறுவன தலைவராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன தமக்கு டெலகொம்மில் நிறைவேற்று அதிகாரம் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 23ஆம் திகதியன்று குமாரசிங்க, டெலிகொம் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் டெலிகொம் நிறுவன பணியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது தமது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ள ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments