Subscribe Us

header ads

லண்டனில் நூறு ரூபாய் வாடகையில் வீடு வேண்டுமா?

இங்கிலாந்தின் இணையதளம் ஒன்றில், ஒரே பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் நூறு ரூபாய்) அடுக்குமாடிக் குடியிருப்பு வாடகைக்கு கிடைக்கும் என அறிவிப்பு வெளிவந்திருந்தது.

இந்நகரில் ஒரேயொரு படுக்கையறை மற்றும் கழிவறை கொண்ட வீடுகளே குறைந்தபட்சம் நானூறு பவுண்டுகள் வரை வாடகை வசூலிக்கப்படும். பலபேர் ஆச்சரியம் அடைந்தனர். 

கிழக்கு லண்டனில், ஐந்து அறைகள் கொண்ட மாபெரும் அடுக்குமாடிக் குடியிருப்பில், இரண்டு அறைகளை முழுமையாகவும், சமையலறை, கழிவறை, தோட்டம் போன்றவற்றை பகிர்ந்துகொள்ள ஒரேயொரு பவுண்டு மட்டுமே வாடகையாக வசூலிக்கவும் காரணம் இருக்கின்றது. 

அவ்வளவு எளிதாக இந்த வீட்டுக்கு யாரும் குடியேறிவிட முடியாது.

வெப் டெவலப்பர்/மொபைல் செயலி உருவாக்கிய அனுபவம் உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய பிரத்யேக சலுகையை வழங்க உரிமையாளர் முன்வந்துள்ளார். இந்த குடியிருப்பின் உரிமையாருக்கு செயலி தொடர்பாக ஒரு யோசனை இருக்கிறது, ஆனால் வேலைக்கு ஆள் வைக்கும் அளவுக்குப் பணமில்லையாம். 

ஆகவே, இங்கே குடியிருக்க வரும் நபர் தனது தினசரி வேலை முடித்து வீடு திரும்பும்போது, கொஞ்சம் நேரம் ஒதுக்கி உரிமையாளருக்கு விருப்பமான அந்த செயலியை உருவாக்க வேண்டுமாம்.

இந்த வீட்டில் குடியேற, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments