Subscribe Us

புத்தளம் பகுதியில் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையின் மன்றாட்டம் (VIDEO)

புத்தளம் பகுதியில் 6 வயது சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தலை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று மதியம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இப்போராட்டம் பெரிய பள்ளிவாசல் ஜூம்மா தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய பொதுமக்களினால் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் ஒரு மணித்தியாலங்களாக நடைபெற்ற இப்போராட்டத்தில் பள்ளிவாசலில் இருந்து சுற்றுவட்டம் வரை பேரணியாக வந்து நிறைவடைந்தது.

இதன் போது பல சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த  பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை எம்.ஜென்ஸீத்  இவ்விடயத்தை மூடிமறைக்க சிலர் நடவடிக்கை மேற்கொள்வதாகவும்,மனித உரிமை அமைப்புகள் இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் இதற்காக நான் ஒருபோதும் பின்னிற்க போவதில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Post a Comment

0 Comments