பைஷல் இஸ்மாயில் –
அம்பாறை மாவட்ட முஸ்லீம் லீக் இளைஞர் முண்ணனியின் 36 ஆண்டு மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9.30 மணியளவில் கல்முனை ஆசாத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.
அம்பாறை மாவட்ட முஸ்லீம் லீக் இளைஞர் முண்ணனியின் மாவட்ட தலைவர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பாஸீல் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 25 சமூகசேவையாளர்கள் இந்நிகழ்வின்போது பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளமையும் இதில் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரைப் பற்றிய தகவலை நான் இங்கு சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அவரின் பெயருக்கு மாற்றுக் கருத்து சமூக சேவையாளர் என்றுதான் சொல்லலாம் அந்தளவிவுக்கு அவரிக் சமூக சேவைகள் அமைந்து காணப்படுகின்றது.
சமூகத்துக்கு சேவை செய்வது என்றால் அவருக்கு மிக ஆழப்பிரியம் கொண்டவராகத்தான் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அவரைப் பற்றிய தகவல்…
Dr. KLM. Nakfer, BUMS ( University Of Colombo)
MSC(IT). MSC IN MAAI (University of Kaleny)
இஸ்மாலெவ்வை கலந்தர் லெவ்வை (போடிமெனேஜர்) அலியார் மரைக்கார் சித்தி மஸாயினா தம்பதிகளின் புதல்வராக 1970.06.19 ஆம் திகதிஅட்டாளைச்சேனையில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை அல் - முனீறா வித்தியாலயத்தில் கற்று புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து தனதுஇரண்டாம் நிலைக் கல்வியை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தொடர்ந்தார். க.பொ.சா.தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுபெற்ற இவர்அதே பாடசாலையில் உயர்தரத்தை உயிரியல் விஞ்ஞானத்துறையில் கற்று சிறந்த பெறுபேறுபெற்று மருத்துவத்துறை யூனானி பிரிவுபல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார்.
இது இப்பாடசாலையின் முதல் மாணவன், அட்டாளைச்சேனையின் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுக்கொடுத்தது. 1994 ஆம் ஆண்டுகொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்து 2000 ஆம் ஆண்டு இத்துறையில் இரண்டாம் தர (SECOND CLASS) பட்டம்பெற்று வெளியேறினார்.; கணணிவிஞ்ஞானத்துறையில் உயர்டிப்ளோமாவும் மற்றும் டிப்ளோமா போன்ற பட்டங்களைப்பெற்று அரச, தனியார் நிறுவனங்களில் பகுதிநேரவிரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் வீரகேசரி பத்திரிகையில் 02 வருடங்கள் கணணி விஞ்ஞான துறை சம்மந்தமான சுயாதீன எழுத்தாளரக செற்பட்ட இவர் இலங்கைதுறைமுக அதிகாரசபையில் தகவல் தொழிநுட்ப பிரிவில் நிறைசேற்றுத்தர உத்தியோகத்தராக 05 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
ஒலுவில்> நிந்தவூர், பொத்துவில், இறக்காமம், காரைதீவு மற்றும் ஆலையடிவேம்பு போன்ற பிரதேசங்களில் உள்ள ஆயுள்வேத வைத்தியநிலையங்களை உருவாக்குவதற்கு முன்னின்றுழைத்தவர். 2007 ஆம் ஆண்டு இலங்கை ஆயுள்வேத சுகாதார துறையில் ஆரம்ப மருத்துவஉத்தியோகத்ராக இணைந்து கொண்ட இவர் ஒலுவில், நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றினார். நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலையை கிராமிய, மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அயராதுழைத்த இவர்இவ்வைத்தியசாலையில் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2014.05.28 ஆம் திகதிவரை வைத்திய அத்தியட்சகராகவும் கடமையாற்றியுள்ளமைசிறப்பம்சமாகவுள்ளது.
அசர, தனியார் ஆயுர்வேத வைத்தியத்துறையில் பல நவீன யுக்கதிகளைக் கையாண்டு பலசாதனைகளை உருவாக்கியர் என்ற புகழாரத்திற்குசொந்தக்காரராகவும் உள்ளார். இச்சேவை மக்கள் மதியில் சென்றடைய வேண்டும் என்பதில் தீராத தாகம் கொண்ட இவர் சுடர்ஒளிபத்திரிகையில் 02 வருடங்கள் தொடர்ச்சியாக எழுதியதுடன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் தனதுஆக்கங்கள், நேர்காணல் பேன்றநிகழ்சிசிகளினூடாக ஆயுள்வேத துறை முன்னேறுவதற்கு தொர்ச்சியாக பாடுபட்டுக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலனி பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத வைத்தியத்துறையில் நிருவாக முகாமைத்துவ பட்டமுடித்துள்ள இவர் இந்தியா, மலேசியா மற்றும்இலங்கை பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சர்வதேச மகாநாடுகளில் தொடர்ச்சியாக பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தும் வரகின்றார்.
ஜனாதிபதி செயலனியின் தவல்தொழில்நுட்ப (ICTA – EDRY) கிழக்குமாகாண தூதுவராக செற்பட்டதுடன் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின்விதாதா பிரிவுக்கு இணைப்பாளராகவும் செற்பட்டார். மேலும் Youth Assembly of Srilanka என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின்இஸ்தாவகராகவும் நிறைவேற்று பணிப்பாளராகவும் இருப்பதுடன் பல அரச> அரச சார்பற்ற நிறுவனங்களில் வளவாளராகவும்> ஆய்வாளராகவும்தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றார். அரசாங்க ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தின் கிழக்குமாகாணஇணைப்பாளராகவும் செற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கிரம அபிவிருத்திச் சங்கம்> பாடசாலை அபிவிருத்திச் சங்கம் போன்ற அமைப்புக்களில் தலைவர் மற்றும் செயலாளராக இருந்து பலசமுகசேவைகளை முன்னெடுத்துள்மை இவரது சமுகப்பற்றை எடுத்தியம்பும் விடயமாகவுள்ளது.
மேற்குறிபிடப்ட்டுள்ள செயற்பாடுகளின் மூலமாக பலதுறைகளில் கால்பதித்துள்ள இவர் 2014.05.28 ஆம் திகதி அட்டாளைச்சேனை மாவட்டஆயுர்வேத வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். இதன் பின் இவரது அயராத முயற்சியால் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையை தளஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தி வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments