Subscribe Us

header ads

ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெயர் ரவீந்­திர சந்தேஷ் கணேசன்

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதிர்க்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன புதி­தாக நேற்று சபையில் தமிழ்ப் பெயரை சூட்டி அவரை தமி­ழ­ராகவர்­ணித்தார்.
அத்­துடன் ரவீந்­திர சந்தேஷ் கணேசன் என்­ப­துவே ரவி கரு­ணா­நா­யக்­கவின் உண்­மை­யான பெயர் என்றும் அந்த பெயரே பாரா­ளு­மன்ற ஹன்­சாட்டில் பதி­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பந்­துல குண­வர்­தன அடித் துக் கூறினார்.
எனினும் பந்­துல குண­வர்­தன எம்.பி.யினால் மேற்­படி கூறப்­பட்­ட­தை­ய­டுத்து சபைக்குள் குழப்­ப­நிலை தோன்­றி­யது. இன­வா­தத்தை தூண்டி உரை­நி­கழ்த்த வேண்டாம் என்று சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல பந்­துல குண­வர்­த­ன­வுடன் முரண்­பட்டார். அத்­துடன் ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் பலரும் உறுப்­பினர் பந்­துல குண­வர்­த­னவின் கருத்­துக்கு கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர்.
இதே­நேரம் சபைக்குத் தலைமை தாங்­கிய உறுப்­பினர் ஆனந்த குமா­ர­சிறி உறுப்­பி­னரின் பெயரை மாத்­தி­ரமே பிரஸ்­தா­பிக்­கு­மாறும் வேறு பெயர்­களை தவிர்க்­கு­மாறும் கேட்டுக் கொண்டார்.
பந்­துல
இத­னை­ய­டுத்து விளக்­க­ம­ளித்த உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன கூறு­கையில்,
பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வாகும் உறுப்­பி­னர்­க­ளது பெயர்கள் பாரா­ளு­மன்ற ஹன்­சாட்டில் பதி­யப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெயரும் ஹன்­சாட்டில் பதி­யப்­பட்­டுள்­ளது. அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக ஆனதன் பின்னர் அவ­ரது பெயர் ரவீந்­திர சந்தேஷ் கணேசன் என்றே பதி­யப்­பட்­டுள்­ளது.விடயம் அறி­யா­த­வர்கள் பாரா­ளு­மன்ற ஹன்­சாட்டை எடுத்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு திறைசேரி ஊண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்களை நிறை வேற்றிக் கொள்வதற்கான விவாதத்தின் போதே மேற்படி சர்ச்சை எழுந்திருந்தது.

Post a Comment

0 Comments