இறுதிக் கட்டப்போரின் இறுதி 12மணி நேரத்தில் ஏற்பட்ட பொதுமக்களின் அதிகளவான உயிரிழப்புக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே காரணமாகவுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு அறிக்கை, உடலாகம ஆணைக்குழுவின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை ஆகியன நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் யுத்தத்தில் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்டமை, சிறுவர்கள் படையில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் பணியாற்றிய அதிகமான தொண்டர் சர்வதேச நிறுவனங்களும் குறிப்பிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கிய மரியாதைக்குரிய தொண்டர் நிறுவனமொன்று இறுதிக்கட்ட யுத்ததின் இறுதி 12மணி நேரத்தில் விடுதலைப்புலிகளாலேயே அதிகளவான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளமையை மதிப்பிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தருமன் அறிக்கை உட்பட ஏனைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைப் போன்று பொதுமக்களை இனவழிப்புச் செய்யும் நோக்கில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலங்கை இராணுவத்தினரால் திட்டமிட்டு இலக்குவைக்கப்பட்டனர் என்ற பரிந்துரையை நிராகரிப்பதாக பரணகம அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த அறிக்கைகள் குறுகிய மற்றும் வரையறைக்குட்பட்ட வகையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சர்வதேச குற்றங்கள் தொடர்பாக விசாரண செய்யுமாறு வலியுறுத்துவதாகவும் பரணகம அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இறுதிக்கட்டத்தில் 3 இலட்சம் முதல் 3 இலட்சத்து 30ஆயிரம் வரையிலான தமிழ் மக்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தபட்டனர். அவர்களை பயணக்கைதிகளாக பயன்படுத்தி பதுங்கு குழிகளையும் தோண்டும் செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தினர். சிறுவர்களை போர்க்களத்தின் முன்னரங்கங்களில் போரிடுவதற்காக பயன்படுத்தினர்.
மக்களை தம்முடன் வைத்து விடுதலைப்புலிகளின் தலைமையின் பலத்தை பாதுகாக்க முயன்றனர். அத்துடன் பரியளவிலான பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கபட்டது. இதனால் பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டில் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தர்ர்ர்கள். அவர்களின் கட்டப்பாட்டில் இருந்து இறுதித் தருணத்தில் பொதுமக்கள் தப்பிக்க முயன்றபோது அவர்கள் மரணத்தை அடைந்தனர். அவர்கள் இலங்கை இராணுவத்தினர் வீசிய ஷெல்களால் உயிரிழந்ததாக பிரசாரம் ஊடகங்களுக்கு பிரசாரம் வௌிநாடுகளின் தலையீடுகளை ஏற்படுத்துவதற்காகவும் பயன்படுத்தினர்.
பொதுமக்களை கொலை செய்வதற்காக தற்கொலைகுண்டுதாரிகள்இ நிலக்கண்வெடிகள் மற்றும் ஏனைய வெடிபொருள் சாதனங்களைப் பயன்படுத்தினர். இதனால் பாரியளவிலான பொதுமக்கள் உயிரிழந்தனர். அத்துடன் புலிகள் சிறைப்பிடித்தவர்கள் தப்பிக்க முயன்றபோதும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. மேலும் ஆயுதம் தரித்தவர்கள் சிவில் உடையை அணிந்திருந்தார்கள். அவர்களின் உயிரிழப்புக்களும் பொதுமக்களின் இறப்புக்களாக காண்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இக்காரணங்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமையாலேயே அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் குறிப்பிடத்தக்க பொதுமக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஆணை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் பொதுமக்களை தமது கட்டுப்பாட்டிலிருந்து செல்வதற்கு விடுதலைப்புலிகள் அனுமதித்திருக்காமையாலேயே இவ்வாறானதொரு தவிர்க்க முடியதொரு விளைவு ஏற்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் 12ஆம் திகதி இலங்கை அரசாங்கம் போர்தவிர்ப்பை அறிவித்திருந்தைமையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவதை முற்றாக நிராகரித்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது.
காணமல் போனோர் தொடர்பான விவகாரத்தை கையாள்வதற்காக பல்வேறுபட்ட பொறிமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் தற்போது வரையில் உரிய தீர்வொன்று கண்டறியப்படவில்லை. ஒருங்கிணைந்த பொறிமுறை மற்றும் தேசிய பொறிமுறை ஊடாக காணமல் போனோரின் குடும்பங்களுக்கு ஆதரவோடும் அன்போடும் வாழ்வாதார உதவிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
வீட்டிலிருந்தபோதே உறவுகள் அழைத்துச் செல்லபட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதோடு வௌியில் சென்ற போதும் சிலர் காணமல்போனதாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. எனினும் காணமல்போயுள்ளார்கள் என்ற விடயம் மூன்றாவது தரப்பினராலேயே உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் உள மற்றும் சமுக சேவைகளை முன்னெடுக்குமாறும் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது.
பரணகம ஆணைக்குழுவானது வடக்கு கிழக்கு உட்பட நாடாளவிய ரீதியில் 12அமர்வுகளை செய்திருந்தது. குறித்த ஆணைக்குழுவில் மக்ஸ்வெல் பரணகம உட்பட சுரஞ்ஜன வித்தியாரட்ன, மனோராமநாதன், ரத்நாயக்க, எச்.சுமணபால ஆகியோர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments