Subscribe Us

header ads

கொண்டயா தொடர்பில் இருக்கும் அக்கறை கொலை செய்யப்பட்ட சேயா குறித்து யாருக்கும் இல்லை

கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தொடர்பில் சட்டத்தரணிகள் தீவிர அக்கறை காட்டும் நிலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயா குறித்து யாருக்கும் அக்கறை இல்லை என்று சிறுமியின் தகப்பனார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறுமி சேயாவின் தந்தை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நிகழ்த்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள சேயாவின் தந்தையார், எனது மகளின் படுகொலை தொடர்பில் கைது செய்து விடுவிக்கப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தொடர்பில் ஒருசில சட்டத்தரணிகள் தீவிர அக்கறை காட்டுகின்றனர். அவருக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் செல்கின்றனர். 
ஊடகவியலாளர்களும் இப்போது கொண்டயாவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் குற்றவாளிகளை கதாநாயகர்களாக மாற்றி விடும். அத்துடன் குற்றவாளிகளுக்கு சமூகத்தின் மத்தியில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமைந்து விடும்.

கொண்டயா தொடர்பில் இவ்வளவு தீவிர அக்கறை காட்டும் யாரும் சிறுமி சேயா தொடர்பில் காட்டுவது இல்லை. சேயாவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு யாரும் கோரிக்கை வைப்பதும் இல்லை என்றும் சிறுமி சேயாவின் தந்தை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments