Subscribe Us

header ads

பொதுமக்களுக்கு ஒரு நீதி, விமல் வீரவன்சவுக்கு ஒரு நீதியா!

சாதாரண பொதுமக்களுக்கு அமுல்படுத்தப்படும் சட்டதிட்டங்கள் விமல் வீரவன்ச தொடர்பில் கையாளப்படவில்லை என்று ஜீ.எச். புத்ததாச கடுமையான கொந்தளிப்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, செல்லுபடியற்ற கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்று நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

எனினும் குறித்த குற்றச் செயலுக்காக 28 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்க முடியும் என்று தெரிவித்துள்ள கடுவலை நகர சபையின் முன்னாள் தலைவர் புத்ததாச, விமல் வீரவன்ச தொடர்பில் சட்டம் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்றுதெரிவித்துள்ளார்.

சாதாரண ஒரு குடிமகன் செய்யும் சிறு தவறுகளுக்கும் கூட பதினான்கு நாட்கள் விளக்கமறியல் தண்டனை வழங்கும் பொலிசாரும், நீதித்துறையும் விமல் வீரவன்சவை வெறுமனே பிணையில் வெளியில் விட்டுள்ளார்கள்.

அத்துடன் விமல் வீரவன்ச தனது காணாமல் போன கடவுச்சீட்டு தொடர்பாக அன்றைய தினம் அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அதுவே ஒரு சாதாரண பொதுமகனுக்கு அவ்வாறு பெற்றுக் கொள்ள முடியுமா என்றும் ஜீ.எச். புத்ததாச கேள்வியெழுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments