Subscribe Us

header ads

சூரியனில் மாபெரும் ஓட்டை – பூமிக்கு ஆபத்தா?

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது பூமிகளின் அளவாக இருப்பதாக இதன்மூலம் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி இதன் காந்தப் புலம் அதிகவேக சூரிய காற்றை வீசுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனைக் கடந்த அக்டோபர் 10-ம் தேதி எடுக்கப்பட்டுள்ள படம் மூலம் நாசா உறுதி செய்துள்ளது. இந்த ஒளிவட்டத் துளையானது, புற ஊதா அலைநீளத்தினால் நமது கண்களால் காணமுடியாத நிலை உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments