Subscribe Us

header ads

இலங்கையில் வீழ்ச்சியடையம் பதிவு திருமணங்கள்!

2015 ஆம் ஆண்டின் புள்ளி விவரவியல் விவரத்தின் பிரகாரம், பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களமே இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 175, 728 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டு 180,760 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றன.
2011ஆம் ஆண்டு 200,214 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றன. இது 2012ஆம் ஆண்டு 198,710ஆக இருந்தது.
கண்டிய மற்றும் முஸ்லிம் பதிவுத் திருமணங்களும் குறைந்துள்ளன. கண்டிய திருமணம், 2012ஆம் ஆண்டு 1,651ஆக இருந்தது. இதேவேளை 2011ஆம் ஆண்டு 2,432 ஆக இருந்தது.
இதேவேளை, 2012 ஆம் ஆண்டு 20,189 முஸ்லிம் பதிவுத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. எனினும், இது 2013 ஆம் ஆண்டு 19,990 பதிவுத் திருமணங்களே நடைபெற்றன.
ஆனால் தற்போது இலங்கையில் பதிவு செய்யாமல், பலர் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments