பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட தாக்குதல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத மிலேச்சத்தனமான தாக்குதல் என்று மங்கள சமரவீர கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாகரிகமடைந்த சமூகத்தில் கருத்துக்களை வெளிப்படுத்துதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்பன ஜனநாயக உரிமைகளாகும்.
ஆனால் பொலிசார் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மிலேச்சத்தனமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறான கொடூரங்கள் மைத்திரி-ரணில் யுகத்திற்கு ஒருபோதும் பொருத்தமற்றது என்பதை வலியுறுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த ஆட்சியில் நடந்த இவ்வாறான தவறுகளின் காரணமாகவே பொதுமக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னும் பொலிசாரின் ஆணவப் போக்கு மாறவில்லை என்பதையே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அவர்களின் தாக்குதல் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
இவ்வாறான செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும் என்றும் மங்கள சமரவீர தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


0 Comments