இலங்கை போக்குவரத்துச் சபைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்த வழக்கு எதிர்வரும் 11ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஆதரவாளர்களை ஏற்றிச் செல்ல இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலின் போது அநுராதபுரத்தில் நடைபெற்ற மஹிந்தவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் இருந்து கெஸ்பாவையில் நடைபெற்ற கடைசி பிரச்சாரக் கூட்டம் வரை இவ்வாறு ஆதரவாளர்களை ஏற்றிச் செல்ல இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இதற்காக மஹிந்த தரப்பிலிருந்து போக்குவரத்துச் சபைக்கு 14 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு வாணிப நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எதிர்வரும் 11ம் திகதி வழக்கு தொடர்பான வாதங்களை முன்வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


0 Comments