கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஒளிபரப்பான விளம்பரங்கள் தொடர்பில் சுயாதீனத் தொலைக்காட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷ 42 லட்சம் ரூபா மட்டுமே கடன் பாக்கியாக வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான செய்தியொன்றை விமல் வீரவன்சவுக்கு ஆதரவான இணையத்தளம் ஒன்று பிரசுரித்துள்ளது.
குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஒளிபரப்பான விளம்பரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 11 கோடி வரை சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ள சுயாதீன தொலைக்காட்சியின் உள்ளக கணக்காளர் அலகியவன்ன, தான் முன்பு தெரிவத்த தொகை தவறானது என்று ஏற்றுக் கொண்டுள்ளார்.
உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ 42 லட்சம் ரூபாவை மட்டுமே சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும், 11 கோடி ரூபா என்பது தவறான தகவல் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.


0 Comments