Subscribe Us

header ads

மருத்துவர் ஹப்லா நஸ்மின் உயிரிழந்த காரணம் வெளியாகியது

சிலாபம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே என தெரியவந்துள்ளது.

ஹப்லா நஸ்மின் என்ற 25 வயதான மருத்துவர் , உணவு உட்கொண்ட பின்னர் திடீரென சுகயீனமுற்றதுடன் பின்னர் உயிரிழந்திருந்தார்.

வைத்தியசாலையில் உள்ள மருத்துவர்களுக்கான உணவகத்திலேயே அவர் மதிய உணவை உட்கொண்டுள்ளார்.

அவர் உட்கொண்ட அன்னாசிப் பழமே ஒவ்வாமையேற்பட காரணமென பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அவரது பெற்றோர்கள் சவுதி அரேபியாவில் வசிப்பதாகவும் , அவர்
கல்கிஸ்சையில் உள்ள உறவினரின் பராமரிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments