Subscribe Us

header ads

அனுராதபுரம் கொலை: அரசியல் பின்னணியா? எஸ்.எப்.லொகு நாட்டை விட்டு தப்பினாரா?

அனுராதபுரத்தில் ஹோட்டல் மீது தாக்குதல் நட த்தப்பட்டு மற்றும் அதன் உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் பல சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

எனினும் இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் , எஸ்.எப். லொகு என அழைக்கப்படுபவர் இராணுவத்தின் விசேட படையணியின் முன்னாள் வீரராவார்.

இந்நிலையில் , அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல பிரதேச அரசியல்வாதியொருவரின் உதவி கிடைத்ததா என பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதேவேளை குறித்த சந்தேகநபருக்கும் , ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையே ஏற்கனவே மோதல் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஹோட்டல் மீது சந்தேகநபர் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சந்தேகநபர் 4 மாதங்கள் வரை தலைமறைவாகி ஹோட்டல் மீதான தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் , பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் இருக்கும் படங்களும் இணையத்தில் வெளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments