இதன்போது கிழக்கு மாகாண விசேடமாக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை அதிக எண்ணிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் பாரிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான வசதிகளை தங்கள் தரப்பால் செய்ய முடியும் என்றும் இதில் தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அர தரப்பால் உறுதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று தற்போது வகிக்கும் பிரதியமைச்சர் பதவிக்குப் பதிலாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை மிக விரைவில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்குவதாகவும் அங்கு ஏகமனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபை (கிழக்கு மாகாண சபை) தேர்தல்களைக் கருத்தில் கொண்டே இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இவற்றின் ஊடாக ஒரு விடயம் தெளிவாகிறது கிழக்கு மாகாணத்தின் மேற்சொன்ன இரு மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியை முற்றாகத் தடுக்கும் ஒரு செயற்பாடு உள்ளது போன்றே தெரிகிறது.
இதேபோன்று, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான அக்கறையும் இப்போது அரசு தரப்பார் பக்கம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் பெறாவிட்டாலும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்ற 33,0000 வாக்குகளே அரச தரப்பின் இந்த அக்கறைக்கு காரணமாகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையிலேயே 33,000 வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக் கொண்டமையானது ஆட்சியாளர்களையும் சிந்திக்க வைத்துள்ளது.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீனைச் சந்தித்துப் பேசியமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்கள் ஓரிண்டுதான். உள்ளே நிறைய விடயங்கள் பேசப்பட்டன. ஆனால் அவைகள் ஊடகங்களுக்கு ஒழிக்கப்பட்டு விட்டன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சர் சகாக்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது நீண்ட நேரம் எடுக்கமாட்டார். ஆனால், அமைச்சர் ரிஷாத் சந்தித்து பேசிய தினத்தில் ரிஷாத் எழும்பி வரும்வரை ரணில் பேசிக் கொண்டே இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சில வேளைகளில் அம்பாறை மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு “அம்போ“ என்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கம் அரசுக்கு உள்ளதோ தெரியாது. அதற்கான கருவியாக அமைச்சர் ரிஷாத் பயன்படுத்தப்படலாம் அல்லவா?
அதற்காகத்தான் ரிஷாத் பதியுதீனின் ஓர் அமைச்சின் கீழ் இவ்வளவு பொறுப்புகளோ தெரியாது
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இம்முறை அதிகமான நிறுவனங்கள், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயல்படவுள்ளன. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கீழ் 36 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவைகள் வருமாறு
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு
--------------------------
1. வணிக திணைக்களம்
2. பதிவாளர் நிறுவன திணைக்களம்
3. இலங்கை புலன் சொத்துக்கள் செயலகம்
4. இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை
5. நுகர்வோர் தொடர்பிலான அதிகார சபை
6. வரையறுக்கப்பட்ட லங்கா ச.தொ.ச.
7. வரையறுக்கப்பட்ட இலங்கை பொது வியாபார நிறுவனம்
8. கூட்டுறவு மற்றும் மொத்த வியாபார நிறுவனம்
9. அளவைகள் தரக்கட்டுப்பாட்டு திணைக்களம்
10. உணவு ஆணையாளர் திணைக்களம்
11. கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்
12. கூட்டுறவு சேவை ஆணைக்குழு
13. உள்நாட்டு வியாபார திணைக்களம்
14. தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம்
15. இலங்கை ஆடைத் தொழிற்சாலை நிறுவகம்
16. நெசவு கைத்தொழில் திணைக்களம்
17. கஹட்ட கஹ கிரபைட்
18. லங்கா லேலன்ட் லிமிடட்
19. லங்கா அசோக் லேலன்ட் லிமிடட்
20. வரையறுக்கப்பட்ட இலங்கை சீமெந்து நிறுவனம்
21 இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம்
22. மாந்தாய் சேல்ட் லிமிடட்
23. ஆனையிறவு உப்பளம்
24. லங்கா டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் எம்போரியம் லிமிடட்
25. லங்கா சலுசல லிமிடட்
26 தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை
27. தேசிய திறன் விருத்தி சபை
28. லக்சல
29. தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம்
30. சிறிய மற்றும் மத்திய அளவிலான முயற்சிகளுக்கான முதலீட்டு சங்கம்
31.சிறிய மற்றும் மத்திய அளவிலான முயற்சியாண்மை அதிகார சபை
32.வரையறுக்கப்பட்ட ஹிங்குராங்கொடை சீனி கைத்தொழில் நிறுவனம்
33. வரையறுக்கப்பட்ட லங்கா சீனி தனியார் நிறுவனம்
34. வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கூட்டுத்தாபனம்
35. லங்கா கனிய மணல் நிறுவனம்
36. பரந்தன் கெமிகல்ஸ் லிமிடட்


0 Comments