Subscribe Us

header ads

26/28 /29 /30 ம் திகதிகளில் புத்தளத்தில் வியாபாரா முகாமைத்துவ பாடநெறி பதிவுகளுக்கு இன்றே முந்துங்கள்

இன்று நம்மில் பலர் வியாபாரம் செய்கின்றனர் , சிலர் இலாபம் பெறுகின்றனர் பலர் நஷ்டம் அடைகின்றனர்...

காரணம் அது தொடர்பான போதிய அறிவும் ,தெளிவும் இல்லாமையே ஆகும் ..

வர்த்தகம் முகாமைத்துவம் (Business Management ) தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வது எல்லோருக்கும் சாத்தியமா ? என்று கேட்டால் பலரும் யோசிக்காது சொல்வது முடியாது என்பதே ஆகும்..

விதிவிலக்காக சிலர் இவ்வாறான விடயங்களை தேடி பெற்று அதன் மூலம் பயன் அடைந்தும் இருப்பார்கள்

ஆனால் முடியாது என்போர் அதற்கு காரணமாக நான் பாடசாலை படிப்பை இடையில் விட்டவன், என்னால் நேரம் செலவழித்து இதன் பின்பும் படிக்க முடியாது, பணம் செலவழிக்க முடியாது , கிழமை தோறும் கொழும்புக்கு ஏறவும் - இறங்கவும் என்னால் முடியாது எனும் விடையை சொல்வார்கள் .

இப்படி காரணம் சொல்லும் பலருக்கு இவ்வாறான ஒன்றை கற்க வேண்டும் எனும் ஆசையும் மனதின் ஒரு மூலையில் இருக்கவே செய்யும் ,

ஆக இதற்கு தீர்வு என்ன?

தீர்வு இருக்கிறது , நமக்கு தெரியாது

இதற்கென்று அரசாங்கம் பல இலட்சம் பணத்தை வருடந்தோறும் ஒதுக்குகிறது , மாவட்ட செயலகங்கள் (கச்சேரி ) ஊடாக இளைஞர் அலுவல்கள் & திறன் அபிவிருத்தி அமைச்சின் மூலம் மாதாந்தம் இவ்வாறான நிகழ்வுகள் நடந்த வண்ணமே உள்ளன .

அதில் ஒரு கட்டம் அதாவது இம்மாதத்திற்கான பயிற்சி நெறி ஒன்று அடுத்த வாரம் (புத்தளம் மாவட்டத்திற்கு ) 26/28 /29 /30 ம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3.30 வரைக்கும் நடைப்பெறவுள்ளது.

இதிலே கலந்து கொள்வதன் மூலம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்தல், சந்தைப்படுத்தல், ஊழியர்களை நிர்வகித்தல், வரி தொடர்பான விடயங்கள், உற்பத்தியை மேம்படுத்தல், வாடிக்கையாளர் உறவை வளர்த்தல், என்று பல விடயங்களை கற்கலாம் .

நான்கு நாட்கள் நடைப்பெறும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள புத்தளம் சொந்தங்கள் , மாவட்ட காரியாலயத்தில் (கச்சேரியில்) உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.

இதற்கு வயது எல்லையோ , கல்வி தகைமையோ, கட்டணமோ எதுவும் ஒரு பாதிப்பையும் உண்டு பண்ணாது , ஆர்வம் உள்ள யாரும் கலந்து கொள்ளமுடியும்

மேலதிக விபரங்களுக்கு - சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு , புத்தளம் மாவட்ட காரியாலயம்  032 22 65 239

குறிப்பு - பிற மாவட்டங்களில் உள்ள ஆர்வம் உள்ள நண்பர்கள் உங்கள் பகுதி மாவட்ட காரியாலயத்தை அணுகுவதன் ஊடாக பயன் பெறலாம் .

Post a Comment

0 Comments