நவவி ஹாஜியார் அவர்களின் எம்பி பதவி மற்றும் கால எல்லை (ஒப்பந்தம் 1 வருடமா 2 வருடமா) என்பன பற்றிய விவகாரம் துவாணம் விடாத குறையாக தொடர்கிறது. அரசியல் நோக்கில் ஒப்பந்தங்கள் செய்வதும் வெளிப்படுத்தாமல் இருப்பதும் முரண்பாடான் கருத்துக்களை ஏஜண்டுகள் மூலம் கசியவிடுவதும் சில போது சாணக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. சுழற்சிமுறையில் வழங்கப்பட்டாலும் 5 வருடங்களுக்கும் பதவியினைத் தொடர தார்மீக உரிமையினை அவர் பெற்றிருக்கிறார் என்பது எனது கணிப்பாகும்.2015/09/04 ம் திகதி “தமிழ் மிறர்” தேசிய நாளிதழில் < மூன்று முஸ்லிம் கட்சிகளுக்குள்ளேயும் அடுத்தக் கட்டப் பிளவு < என்ற தலைப்பில் >முகம்மது பாதுஷா < என்பவர் முழுப்பக்க கட்டுரை (பக்கம் 09) ஒன்றை எழுதியிருந்தார். அதில் //... இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியலில் மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எஸ்.எல் ஹமீடின் அக்கட்சியின் தலைவர் ரிஷாட் போட்டிருந்தார். ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் தேசியப் பட்டியலை சுழற்சி முறையில் வழங்குவதற்கு தீர்மானித்த கட்சித் தலைமை முதல் சுற்றுக்காக எம்.எச்.எம். நவவி அவர்களுக்கு வழங்கி இருக்கிறார் ... //
நவவி அவர்களுக்கு தேசியப் பட்டியல் வழங்குவதற்கு இரண்டு வழுவான காரணங்கள் இருப்பதாக உணர்கிறேன். 1. இடம் பெயர்ந்த மக்களை கணிசமான மக்களைக் கொண்டிருக்கும் புத்தளத்திற்கு எம்பி வழங்காவிட்டால் ரிஷாட் அவர்களுக்கு புத்தளத்தில் இக்கட்டான சூழ்நிலை நிச்சயம் தோன்றும் என்பதை மிக துல்லியமாக முன்கூட்டியே அறிந்து கொண்டமை 2). எதிர்வரும் உள்ளூராச்சி தேர்தலில் நவவி அவர்களைக் கொண்டு தன்னையும் தமது அடிவருடிகளையும் புத்தளத்தில் பலப்படுத்திக் கொள்வது.
மண்ணின் மைந்தரான நவவி அவர்களை ரிஷாட் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி தூக்கியெறிவதனை அவரின் மக்களோ ஆதரவாளர்களோ விரும்பமாட்டார்கள். அதற்கெதிராக காய்களை நகர்த்தக் கூடும்.
Faizur Rahuman
Source :https://www.facebook.com/photo.php?fbid=451054218414277&set=gm.1080545951976076&type=3&theater

0 Comments