Subscribe Us

header ads

எமக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுங்கள்: வட மாகாணசபை வாயிற் கதவை மூடி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் (PHOTOS)


எமக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் அல்லது எப்போது வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கூறுங்கள் என்கேட்டு வேலையில்லா பட்டதாரிகள் வடமாகாணசபை முன்பாக இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இன்றைய தினம் வடமாகாணசபையின் 35 வது அமர்வு நடைபெறும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை பட்டதாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

வடமாகாணசபையின் வாயில் கதவுகளை மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை பட்டதாரிகள் முன்னெடுத்தனர்.

இதனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மாகாணசபைக்குள் செல்ல முடியாத நிலை உருவானது.

இந்நிலையில் தம்மால் முடிந்தவற்றை தாம் செய்வதாகவும் தாம் பட்டதாரிகளை மறக்கவில்லை எனவும் தெரிவித்த முதலமைச்சர் தமக்கும் தடைகள், நெருக்கு வாரங்கள் உள்ளதாகவும் குறுப்பிட்டதுடன், தம்மால் முடிந்தளவு தொடர்ந்தும் செய்கிறோம் எனவும் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

இதன் பின்னரும் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments