நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்சவை, தாம் எவ்வாறு அழைப்பது என்று தெரியாமலிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
தீராத அரசியல் பசியால் மஹிந்த தமது கீர்த்தியை இழந்துள்ளார்.
அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது வீட்டில் இருந்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி என்ற கௌரவம் அவருக்கு இருந்திருக்கும்.
இந்தநிலையில் முன்னர் “;சேர்;” என்ற அவரை அழைத்த தாம் தம்போது “மந்திரிதுமா” என்று அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் ஏனைய சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் “மந்திரிதுமா” என்ற அழைக்கவேண்டியுள்ளது.
வெல்லம்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், புதிய அரசாங்கம் ஆர்ப்பரிப்பு இல்லாமல், புதிய அரசியல் கலாசாரத்தை முன்னெடுத்து செல்கிறது.
தற்போது, அமைச்சர்கள் தமது வாகனங்களில் சாரதிகளுடன் மாத்திரமே பயணிக்கின்றனர்.
இது மைத்திரி - ரணில் நல்லாட்சியை குறித்துக்காட்டுகிறது என்று ஹிருனிக்கா குறிப்பிட்டுள்ளார்.


0 Comments