-The Puttalam Times-
Insight Institute Primary Teaching-இல் முன்பள்ளி ஆசிரியை கற்கைநெறி பயிலுனர்கள் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு மூன்று நாள் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
நேற்று (12) திகதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய இஸ்லாஹிய்யாவின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். முனீர், 'ஒவ்வொரிடமும் தனித்துவமான ஆற்றல்களும் திறன்களும் உள்ளன. எந்தவொரு தொழிலும் வேலையும் இஸ்லாத்தில் தரக்குறைவானதாகக் கருதப்படுவதில்லை. ஒவ்வொரு பயனுள்ள செயலையும் அது மதிக்கின்றது, சன்மானத்தை வழங்குகின்றது.
முன்பள்ளி ஆசிரியைகள் சமூகத்தின் முக்கியமான பிரிவினர் ஆவார்கள். இவர்கள்தான் சமூக சிந்தனையாளர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என அனைவருக்குமான வியக்கத்தக்க அடித்தளத்தை இடுகின்றார்கள்' என்றும் கூறினார்.
தகவலும் படங்களும்: Islahiyya (Facebook profile)
0 Comments