Subscribe Us

header ads

மனைவிக்காக கணவன் உண்ணாவிரதம்



வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற தனது மனைவியை டுபாயில் உள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அவதிப்படுத்துவதாக கூறி நபர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 

தனது இரு பிள்ளைகள் சகிதம் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 

தேவகுவ, ஹினுக்கல பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவரின் வீட்டிற்கு முன்னால் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 25 வயதுடைய அந்தப பெண் 3 மாதங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார். 

கலேவல பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றினால் சுற்றுலா விசாவில் அந்தப பெண் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதாக பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். 

தனது மனைவியை மீண்டும் நாட்டுக்கு வரவழைத்து தருமாறு வேண்டியே அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Post a Comment

0 Comments