ஆரை ஒரு நீர்தாவரம். இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாகப் பயன் படுத்தியுள்ளார்கள். மத்திய, தெற்கு ஐரோப்பாவில் காணப்பட்டது.
பின் ஆப்கானீஸ்தான் இந்தியா, சைனாவுக்குப் பரவிற்று. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவில் காணப்பட்டது. இது செங்குத்தாக வளர்ந்து தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக கொண்ட மிகவும் சிறிய செடி.
இது ஆற்றங்கரை, குளம், ஏரிக்கரைகளிலும், மணல் பாங்கான ஈரமான இடங்களிலும் நன்கு தானே வளர்கிறது. இது தண்ணீரில் மிதக்கும், தரையிலும் வளரும்.
இதற்கு லேசான நிழல் தேவைப்படும். கரிமலவாயு குறைந்து எடுத்துக்கொள்ளும். வளர்ச்சி மெதுவாக இருக்கும். இதில் வேறு வகைகளும் உண்டு.
இதன் இலைகள் பச்சையாக இருக்கும். இது தொடர்ச்சியாக வேர் விட்டுப் படர்ந்து வளரும். இது சுமார் ஒரு அடி நீழும். அதன் வேருடன் 2 அங்குலம் வெட்டி இன விருத்தி செய்வார்கள்.
மருத்துவக் பயன்கள்:
ஆரை வெப்பம் நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது. பாம்புக் கடியைக் குணமாக்கும். கீரையைச் சமைத்துண்ண தாய்பால் சுரப்பை நிறுத்தும்.
இதன் இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் அதிகமூத்திரம், அதிக தாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

0 Comments