Subscribe Us

header ads

கற்பிட்டியின் குரல் மற்றும் , த புத்தளம் டைம்ஸ் ஊடக அனுசரனையுடன் 'வேற்றுப் பாதை' குறுந் திரைப்பட வெளியீட்டு வைபவம் (படங்களும் வீடியோவும்)

வேற்றுப்பாதை திரைப்பட குழுவினர்.

தலையைக் காப்பதற்காக தலைக் கவசம் அணியுமாறு வலியுறுத்தப்படும் காலத்தில், தலைமுறையைக் காப்பதற்காக தலைக் கவசம் அணியுங்கள் என்ற புதிய சிந்தனையை இந்த தேசத்துக்கும் உலகுக்கும் அறிமுகம் செய்கின்றது, வளர் இளம் பருவத்தினரின் கலை ஆக்கமாக வெளிவந்த, ‘வேற்றுப் பாதை’.

London Eagle தயாரிப்பான ‘வேற்றுப் பாதை’ குறுந் திரைப்படம், இன்று (19) புத்தளம் i-Soft College-ல் வெளியிடப்பட்டதுடன், Youtube லும் பதிவேற்றப்பட்டது.

இந் நிகழ்வில், புத்தளம் இந்து தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். நாகராஜா, இயக்குனர் சர்மாவின் தாய்வழி பாட்டன் ரத்ண சபாபதி குருக்கள், தந்தை பால கிருஷ்ண குருக்கள், i-Soft கல்லூரியின் பணிப்பாளர் ஏ.கே.எம். அப்ராஸ், ஒளிப்படக் கலைஞர் ஹஸ்னி அஹமத், கவிஞர் நுஸ்ரி ரஹ்மதுல்லா, Puluthivayal.com நிருவாகி ஜசீம் ரஹ்மான், இத் திரைப்படத்துக்கான ஊடக பங்காளிகளான The Puttalam TimesKalpitiya Voice சார்பாக ஹிஷாம் ஹுஸைன், எஸ்.எம். மனாப்தீன் (தபால் அலுவலகம், புத்தளம்) ஆகியோருடன் இயக்குனர் சர்மாவின் குடும்பத்தினரும் பாடசாலை நண்பர்களும் கலந்துகொண்டனர்.

அதிபர் எம். நாகராஜா, பால கிருஷ்ண குருக்கள், மனாப்தீன் ஆகியோரினால் Youtube-ல் Gajanandan Sarma என்ற Channal-க்கு இக் குறுந் திரைப்படம் பதிவேற்றப்பட்டது. ‘வேற்றுப் பாதை’யின் சிறப்பு வீசீடீக்கள் வருகை தந்த பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்து த.ம.வி. அதிபர் எம். நாகராஜா உரையாற்றும்போது, “வேற்றுப் பாதை” என்ற பெயரை வாசிக்கும்போது, மகா கவி பாரதியின் ‘அக்கிணிக் குஞ்சு’ கவிதைத் தலைப்புக்குப் பிறகு, வாசித்தவுடன் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்கியத்தன்மை வாய்ந்த பெயரொன்றை நான் கண்டதில்லை’ என்றார். சபையினரின் கரவொலி அடங்க சில நிமிடங்கள் எடுத்தன. ஒளிப்பதிவையும் ஒளியமைப்பையும் (Camera and Lighting) சிலாகித்துப் பேசிய அதிபர் நாகராஜா, நடிகர்களின் இயல்பான நடிப்பை பாராட்டினார். இயக்குனர் சர்மா தெரிவுசெய்த கதை, இன்றைய வாலிபர்களுக்கு, குறிப்பாக புத்தளம் பிரதேசத்திற்கு மிகவும் பொருத்தமான; படிப்பினையைத் தரும் கருவைக்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இயக்குனர் கஜானந்த சர்மா ஏற்புரையை நிகழ்த்தினார். ‘தரம் ஒன்பது பயிலும் போது குறுந் திரைப்படம் ஒன்று இயக்க வேண்டும் என்ற ஆவல், இன்று, உயர் தரம் எழுதிய பின்னர் நிறைவேறியுள்ளது. ஒரு நாளில் படப்பிடிப்பை நிறைவுசெய்தாலும், இதன் திரைக்கதை ஆறு மாதங்களாக திரும்பத் திரும்ப எழுதப்பட்டது’ எனக் கூறிய சர்மா, ‘இது எனது தனி முயற்சி அல்ல. ஒளிப்பதிவாளர் பர்ஹான் மற்றும் குழுவினரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி’ என்று கூறினார். இத் திரைப்படத்தின் வெற்றிக்கு தனது குடும்பத்தாரும் பாடசாலை நண்பர்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கும் உற்சாகத்திற்கும் நன்றி கூறினார்.

வரவேற்புரையை நிவேதன் நிகழ்த்தினார். நிகழ்ச்சித் தொகுப்பை இக் கட்டுரையாளன் நிகழ்த்தினார்.

‘வேற்றுப் பாதை’ ஆக்கக் குழுவினர்:
நடிகர்கள் : வை. விதூஷன் (அண்ணன்), சீ. விநித் (தம்பி)
ஒளிப்பதிவாளர் : எம்.என்.எம். பர்ஹான்
நிறக் கலவை (Color Correction) : வீ. சுபாங்கன்
சிறப்புக் காட்சிகள் (SFX) : என். நிவேதன்
திரைக்கதை இயக்கம் : கஜானந்த சர்மா

நிறைவான குறுந் திரைப்படமொன்றைப் பார்வையிட்ட நிறைவை ‘வேற்றுப் பாதை’யில் கிடைக்கின்றது. இத் திரைப்படத்தின் Youtube வீடியோ இணைப்பு கீழ் வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: Hisham Hussain, Puttalam


படங்கள்: MNM Farhan

இயக்குனர் கஜானந்த சர்மா

எஸ்.எம். மனாப்தீன் சிறப்பு வீசீடீ பெறும்போது

எம். நாகராஜா - அதிபர், இந்து த.ம.வி., புத்தளம்

ஜசீம் ரஹ்மான் சிறப்பு வீசீடீ பெறும்போது

Hisham Hussain, Puttalam (The Puttalam Times -Admin-)

நுஸ்ரி ரஹ்மதுல்லா சிறப்பு வீசீடீ பெறும்போது

ரத்ண சபாபதி குருக்கள் சிறப்பு வீசீடீ பெறும்போது


எம். நாகராஜா - சிறப்பு வீசீடீ பெறும்போது

A.K.M Afras -Isoft- - சிறப்பு வீசீடீ பெறும்போது

ஹஸ்னி அஹமத் சிறப்பு வீசீடீ பெறும்போது


Youtubeக்குப் பதிவேற்றும்போது




Post a Comment

0 Comments